ஆர்க்டிக் கடல் பாதையில் சரக்கு கப்பல் சேவையை தொடங்க சீனா திட்டம்
China Eyes Arctic Route: சீனா ஆர்க்டிக் கடல் பாதையில் சரக்குக்கப்பல் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் போர் காரணமாக, சீனா தனது ஐரோப்பாவிற்கான சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு புதிய மாற்று வழியைத் தேடுகிறது.
ஆர்க்டிக் பாதையில் சரக்கு கப்பல் சேவை
இதன் விளைவாக, சீனாவின் Sea Legend எனும் கப்பல் போக்குவரத்து நிறுவனம், “Ice Silk Road” எனப்படும் ஆர்க்டிக் பாதையில் வாரந்தோறும் சரக்கு கப்பல் சேவையை தொடங்கியுள்ளது.
இந்த பாதை, சீனாவின் நிங்போ துறைமுகத்திலிருந்து இங்கிலாந்தின் ஃபெலிக்ஸ்டோவ் துறைமுகம் வரை செல்லும் நேரத்தை பாதியாகக் குறைக்கும்.

ஆர்க்டிக் பகுதியில் பனிப்பாறைகள் உருகுவதால், கோடைக்காலங்களில் கப்பல்கள் ice-breaker கப்பல்களின் உதவியின்றி பயணிக்க முடிகிறது. இதனால் செலவுகள் குறைந்து, போக்குவரத்து எளிதாகிறது.
ஆனால், மேற்கத்திய கப்பல் நிறுவனங்கள் (Maersk, Hapag Lloyd, MSC) இந்த பாதையைப் பயன்படுத்த மறுத்துள்ளன.
காரணங்கள்:
- ரஷ்யாவின் கட்டுப்பாடு (Northern Sea Route-க்கு அனுமதி Rosatom மூலம் வழங்கப்படுகிறது)
- சூழல் அபாயங்கள் - பனிப்பாறைகள், எண்ணெய் கசிவு, உயிரியல் பாதிப்பு
- செயல்பாட்டு சவால்கள் - இயந்திரக் கோளாறுகள், மீட்பு நடவடிக்கைகளில் சிரமம்
Allianz நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, 2013 முதல் 2023 வரை ஆர்க்டிக் கடலில் 531 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் பாதி சம்பவங்கள் இயந்திரக் கோளாறுகளால் ஏற்பட்டவை.
சீனாவிற்கு ரஷ்யாவுடன் உள்ள நெருக்கமான உறவு காரணமாக, இந்த பாதையை பயன்படுத்துவதில் அதிக நன்மை கிடைக்கிறது.
மத்திய கிழக்கு பகுதியில் ஹவுதிக்கள் சீனாவுடன் தொடர்புடைய சரக்குகளை தாக்காமல் இருந்தாலும், தவறான கணக்கீடுகள் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்.
மேற்கத்திய நிறுவனங்கள், ஆர்க்டிக் பாதையை விட Cape of Good Hope வழியாக நீண்ட பயணத்தைத் தேர்வு செய்கின்றன. ஆனால் சீனாவின் “Ice Silk Road” திட்டம், ஆசியா-யூரோப் வர்த்தகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |