சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிப்பு: பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு
சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் 37 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
பட்டாசு தொழிற்சாலை விபத்து
சீனாவின் ஹுனான் மாகாணத்தின் சாங்ஷா நகரில் அமைந்துள்ள லியுயாங் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 4ம் திகதி மிகப்பெரிய வெடிப்பு விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிப்பு விபத்தின் தாக்கமானது 3 கிலோமீட்டர் சுற்றளவு வரை உணரப்பட்ட நிலையில், இதில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் முதற்கட்ட தகவலின் படி, 61 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

வெடிப்பு விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகே வெடிமருந்து கிடங்கு அமைந்துள்ள நிலையில் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொழிற்சாலை நிர்வாகிகள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி இருப்பதாக குற்றம்சாட்டி பொலிஸாரால் அவர்களை கைது செய்துள்ளனர்.
இந்த துயரமான சம்பவத்தில் தற்போது பலியானவர்கள் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது, மேலும் மாயமான ஒருவரை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |