12 மாடியிலிருந்து விழுந்த பெண்: அடுத்து நடந்த ஆச்சரியம்
சீனாவில் 12ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தார் ஒரு பெண். அடுத்த நடந்த விடயம் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.
12 மாடியிலிருந்து விழுந்த பெண்
இம்மாதம், அதாவது, மே மாதம் 13ஆம் திகதி, சீனாவில், தன் கணவருடன் இணைந்து, வீடு ஒன்றின் 12ஆவது மாடியிலுள்ள பால்கனியில் ஜன்னல் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார் பெங் (44) என்னும் பெண்.
அப்போது கிரேன் மூலம் ஜன்னல் ஒன்றைத் தூக்கிக்கொண்டிருந்திருக்கிறார் பெங்.
எதிர்பாராதவிதமாக அந்த ஜன்னலிலிருந்த கண்ணாடி பேனல் ஒரு மரத்தின் கிளையில் சிக்க, நூறு கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட அந்த ஜன்னல் சரிய, அதனுடன் சேர்ந்து கிரேனும் சரிய, கிரேனின் ரிமோர்ட் கண்ட்ரோலை கையில் வைத்திருந்த பெங் கிரேனுடன் இழுக்கப்பட்டு 12ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்திருக்கிறார்.
மனைவி கீழே விழுந்ததைக் கண்டு கணவர் பதறி நிற்கும் நேரத்தில், சும்மா நிற்காதீர்கள், அவசர உதவியை அழையுங்கள் என கீழே இருந்து ஒரு சத்தம் கேட்டுள்ளது.
என்ன நடந்தது?
விடயம் என்னவென்றால், பெங் கீழே விழும்போது, ஒரு இடத்தில் நிழலுக்காக அமைக்கப்பட்டிருந்த தார்பாய் தடுப்பு ஒன்றின் மீது விழுந்து பின் கீழே விழுந்திருக்கிறார்.
ஆகவே அவர் உயிர் பிழைத்துவிட்டார். ஆக, நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன், அவசர உதவியை அழையுங்கள் என பெங் சத்தமிட, உடனடியாக அவரது கணவர் அவசர உதவியை அழைத்துள்ளார்.
பெங்குக்கு வலது பாதம், இடது கால், அடிமுதுகு ஆகிய இடங்களில் பலத்த காயமும், எலும்பு முறிவுகளும் ஏற்பட்டுள்ளன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெங்குக்கு ஏற்பட்டுள்ள எலும்பு முறிவுகளை சரி செய்வதற்காக பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
12ஆவது மாடியிலிருந்து விழுந்த நிலையிலும், ஆறு மாதங்களில் பெங் மீண்டும் நடமாட ஆரம்பித்துவிடுவார் என மருத்துவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |