தமிழ்நாட்டு இளைஞருக்கு BMW கார் பரிசளித்த சீனத் தோழி
சீன இளம்பெண்ணொருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான தனது நண்பர் ஒருவருக்கு BMW கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.
நண்பரை வியப்பிலாழ்த்திய சீன இளம்பெண்
கடந்த ஆண்டு, சீனாவில் வாழும் தனது நெருங்கிய தோழியின் திருமணத்துக்குச் சென்றுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவின் கணேசன்.
அன்று கணேசனுக்கு பிறந்தநாள். சரியாக நள்ளிரவு 12.00 மணிக்கு கணேசனுக்கு கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் அவரது சீனத்தோழி.
Last year on my birthday,I was attending my close friends wedding in China,she had arranged Cake at midnight with a grand celebration in her hometown for me,
— Prawin Ganeshan (@PrawinGaneshan) April 16, 2025
Then she had asked what is my long pending dream,wish list - i said i wanted to buy a BMW,she said before next birthday i… pic.twitter.com/OobXVFAL6l
அப்போது, உனக்கு நிறைவேறாத ஆசை ஏதாவது இருக்கிறதா என்று கணேசனிடம் கேட்டாராம் அவர். தனக்கு BMW கார் ஒன்றை ஓட்ட ஆசை என்றாராம் கணேசன்.
உன்னுடைய அடுத்த பிறந்தநாளுக்குமுன் நீ உன்னுடைய BMW காரை ஓட்டுவாய் என்றாராம் அந்தப் பெண்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கணேசனை அழைத்த அவர், உனது BMW கார் தயாராக இருக்கிறது, வந்து எடுத்துக்கொள் என்று கூறினாராம்.
அடுத்த பிறந்தநாளுக்கு முன் உனக்கு BMW கார் கிடைக்கும் என்று கூறியிருந்த நிலையில், தமிழ்ப் புத்தாண்டு அன்றே கணேசனுக்கு BMW கார் ஒன்றை பரிசளித்து அவரை சர்ப்ரைஸ் செய்துள்ளார் அவரது சீனத் தோழி!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |