உலக தாய்மொழி தினத்தில் தமிழில் வாழ்த்து கூறி அசத்திய வெளிநாட்டு பெண்கள்! வைரல் புகைப்படங்கள்
சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலைக்கழக மாணவிகள் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சீனாவின் பெய்ஜிங் பகுதியில் உள்ள மீஞ்சூப் பல்கலைக்கழகத்தில் நிறைமதி என்பவர் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆசிரியர் பயிற்சி பெற்று அங்கு தமிழ் ஆர்வம் கொண்ட மாணவ மாணவியருக்கு தமிழ் மொழியை கற்றுக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்த தமிழ் பேராசிரியை நிறைமதி சீனா பல்கலைக்கழகத்தில் தன்னிடம் பாடம் கற்பிக்கும் மாணவிகளுக்கு தமிழ் மொழி கற்பித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் பயிலும் மாணவிகள் சிலர் உலக தாய்மொழி தினமான இன்று தமிழ் மொழியை வாழ்த்தும் விதமாக பதாகையில் கற்க கசடற, செம்மொழி குறிஞ்சி, மெய்ப்பொருள் காண்பதறிவு உள்ளிட்ட தமிழ் மொழியில் வாசகங்களை எழுதி தமிழ் மொழிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்த புகைப்படம் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.