சீனாவின் அழகிய ஆளுநர் என கொண்டாடப்பட்டவர்... இன்றைய அவரது பரிதாப நிலை
சீனாவில் மாகாண ஆளுநர் ஒருவருக்கு தவறான நடத்தைக்காக 13 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 1 மில்லியன் யுவான் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
58 ஆண்களுடன்
சீனாவின் அழகிய ஆளுநர் என கொண்டாடப்பட்டவர் Zhong Yang. இவர் மாகாண ஆளுநராகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் துணை செயலாளராகவும் பொறுப்பில் இருந்தார்.
இந்த நிலையில், தம்முடன் பணியாற்றியுள்ள 58 ஆண்களுடன் உடல் ரீதியான நெருக்கத்தில் இருந்ததாகவும் கிட்டத்தட்ட 60 மில்லியன் யுவான் தொகையை லஞ்சமாக வாங்கியதாகவும் இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
தனது 22 வயதில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ள, தற்போது 52 வயதாகும் Zhong Yang படிப்படியாக வளர்ந்து கட்சியின் முதன்மையான பல பொறுப்புகளையும் கைப்பற்றியுள்ளார்.
தொடக்கத்தில் வேளாண் மக்களுக்கு உதவும் வகையில் சில திட்டங்களை முன்னெடுத்து கவனம் பெற்றவர், தனது சொந்த பணத்தில் முதியவர்களுக்கான உதவிகளையும் முன்னெடுத்தார்.
பல மில்லியன் யுவான்
Guizhou மாகாண மக்களால் கொண்டாடப்பட்டு வரும் இவர் தொடர்பில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆவணப்படம் ஒன்று வெளியாக, நிலைமை தலைகீழாக மாறியது.
அதில் இவரின் பின்னணி மொத்தம் அம்பலமானது. நிதி முறைகேடுகள் மட்டுமின்றி, பல மில்லியன் யுவான் லஞ்சம் வாங்கியதுடன், 58 ஆண்களுடன் அவருக்கு தொடர்பிருந்தது என்றும் அந்த ஆவணப்படத்தில் தரவுகளை வெளியிட்டனர்.
இதனையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். செப்டம்பர் மாதம் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது விசாரணை முடிவில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |