கனடாவில் இருந்து முக்கிய இறக்குமதிக்கு தடை விதித்த சீனா: வெளியான காரணம்
கனடாவில் கால்நடைகளில் BSE என்ற விசித்திர நோய பரவல் கண்டறியப்பட்டதை அடுத்து, கனேடிய மாட்டிறைச்சி இறக்குமதியை சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகள் நிறுத்தியுள்ளன.
கடந்த மாதம் ஆல்பர்ட்டாவில் உள்ள பண்ணை ஒன்றில் கால்நடைகளுக்கு BSE என்ற நோய் பரவல் கண்டறியப்பட்டது. இதன் பின்னரே, கனேடிய மாட்டிறைச்சி இறக்குமதிக்கு சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் நடவடிக்கை முன்னெடுத்துள்ளன.
ஆண்டுக்கு சுமார் $170 மில்லியன் மதிப்புடைய சீன சந்தையானது கனேடிய மாட்டிறைச்சித் தொழிலின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி சந்தையாகும். சீனா முன்னெடுத்துள்ள அதே நடவடிக்கையை தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளும் முன்னெடுத்துள்ளன.
BSE என்ற நோய் பரவலானது கடந்த 6 ஆண்டுகளில் கனடாவில் இது முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 6 முறை குறித்த நோய் பாதிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.
மிக சமீபத்தில், கடந்த 2018ல் குறித்த நோய் பரவல் கண்டறியப்பட்டதாக அமெரிக்காவில் இருந்து தகவல் வெளியானது.
கால்நடைகளில் BSE என்ற நோய் தொற்றானது மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது மட்டுமின்றி, இது பரவும் வியாதியல்ல எனவும் நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.