வரியை குறைத்த அமெரிக்கா., சீனாவின் பதில் நடவடிக்கை
அமெரிக்கா முக்கிய வலி நிவாரண மருந்தின் (fentanyl) வரியை குறைத்ததைத் தொடர்ந்து, சீனா அமெரிக்க வேளாண் பொருட்கள் மீது விதித்திருந்த பதிலடி வரிகளை ஒரு வருடத்திற்கு நிறுத்தியுள்ளது.
சோயாபீன், சோளம், கோதுமை, sorghum மற்றும் கோழி உள்ளிட்ட அமெரிக்க வேளாண் பொருட்கள் மீது சீனா கடந்த மார்ச் 4-ஆம் திகதி வரி விதித்திருந்தது.
இந்நிலையில், நவம்பர் 5-ஆம் திகதி சீனாவின் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த வரி வரும் திங்கட்கிழமை மதியம் 1:01 மணி முதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இடையேயான ஒரு வருட கால ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.

அமெரிக்கா, fentanyl தொடர்பான சீன பொருட்கள் மீது விதித்திருந்த வரிகளை 34 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்ததைத் தொடர்ந்து, சீனாவும் பதிலுக்கு இந்த வரியை ரத்து செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம், உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களான அமெரிக்கா-சீனா இடையேயான உறவுகளை நிலைப்படுத்தும் முயற்சியாகும்.
சீனாவின் வரி ரத்து, சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும், இரு நாடுகளின் மக்களின் அடிப்படை நலன்களுக்கேற்பவும் அமைந்துள்ளது.
இது, இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் உள்ளது. கடந்த ஆண்டு, சீனா அமெரிக்காவிடமிருந்து 12 பில்லியன் டொலர் மதிப்புள்ள வேளாண் பொருட்களை வாங்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China suspends U.S. agri tariffs, U.S. China trade deal 2025, soybeans corn wheat tariff update, Trump Xi Jinping tariff agreement, fentanyl levy cuts China response, China U.S. agricultural exports, reciprocal tariff rollback 2025, China trade policy November 2025, U.S. chicken exports to China, global trade tensions ease