சீனாவில் 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: நீதிமன்ற வெளியிட்ட முக்கிய தகவல்
சீனாவில் மியான்மரை சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மோசடி கும்பல்
லாவோஸ், கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளில் டிஜிட்டல் மோசடியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சீனா - மியான்மர் எல்லையில் செயல்பட்டு வந்த கும்பல் ஒன்று பல பில்லியன் டொலர் மதிப்பிலான டிஜிட்டல் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன் இந்த கும்பல் சீன குடிமக்கள் 14 பேரை கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு அந்த கும்பலின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரை சீன பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களுக்கு கடந்த செப்டம்பரில் சீன நீதிமன்றத்தில் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அதனை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்து இருந்தனர்.
மேல்முறையீட்டு விசாரணையின் இறுதியில் 11 பேரின் மரண தண்டனை நிராகரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து சூதாட்ட கும்பலை சேர்ந்த 11 பேரின் மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டதாக நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |