பழச்சாறுக்கு பதில் திரவ சோப்பை பரிமாறிய சீன உணவகம்: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
சீனாவில் உள்ள உணவகம் ஒன்றில் பழச்சாறுக்கு பதிலாக தவறுதலாக வாடிக்கையாளர்களுக்கு திரவ சோப்பு வழங்கப்பட்டதில் 7 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பழச்சாறுக்கு பதில் திரவ சோப்பு
சீனாவில் ஜனவரி 16ம் திகதி ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு பழச்சாறுக்கு பதிலாக தவறுதலாக திரவ சோப்பு பரிமாறப்பட்டதில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வுகோங் வெளியிட்டு இருந்த வீடியோ ஒன்றில், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவகம் ஒன்றில் உணவருந்தி கொண்டிருந்த போது, பணியாளர் ஒருவர் பழச்சாறு என்று கருதி தவறுதலாக திரவ சோப்பு பாட்டிலை எங்களுக்கு பரிமாறினார்.
SCMP composite
பரிமாறப்பட்ட பானங்களில் வித்தியாசமான சுவை கொண்டதாக இருந்தது, உடனடியாக தவறு நடந்ததை உணர்ந்த நானும் மற்ற ஆறு பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம், அங்கு எங்களுக்கு இரைப்பை உறிஞ்சுதல் சிகிச்சை மருத்துவர்களால் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
வுகோங் வெளியிட்ட வீடியோ சிறிது நேரத்திலேயே சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்பட்டது.
Getty Images
பார்வைக் குறைபாடுள்ள பணிப்பெண்
இந்த சம்பவம் தொடர்பாக எஸ்சிஎம்பி(SCMP) வெளியிட்டுள்ள தகவலில், பார்வை குறைபாடு உள்ள பணிப்பெண்ணால் இந்த தவறு ஏற்பட்டதாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும் பணிப்பெண் தனக்கு உணவக வேலையில் அனுபவம் இல்லை என்றும், கண் பிரச்சனை இருந்ததால் தவறுதலாக செய்து விட்டதாக ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் எஸ்சிஎம்பி தெரிவித்துள்ளது.
Getty Images
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட 7 பேரும் மருத்துவமனையில் நிலையாக இருப்பதாக Xucun காவல் நிலையத்தின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு எந்த வகையான தரை சுத்தம் செய்யும் திரவம் வழங்கப்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை என்று உணவு விற்பனை நிலையம் தெரிவித்துள்ளது.
பழச்சாறு மற்றும் பல புளோர் கிளீனர் பிராண்டுகளின் பேக்கிங்கள் அடிக்கடி வெளிநாட்டு மொழிகளில் காணப்படுவதால், அந்த மொழிகள் தெரியாத மக்கள் அதை வேறு வகையான பொருட்களாக தவறாக நினைத்துக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Photo: weixin.qq.com