அமெரிக்க நபர்கள் மீது விசா கட்டுப்பாடுகளை விதித்த சீனா... வெளிவிவகார அமைச்சகம் தகவல்
திபெத் தொடர்பான பிரச்சினைகளில் மோசமாக நடந்து கொண்ட சில அமெரிக்க நபர்கள் மீது விசா கட்டுப்பாடுகளை சீனா அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன அரசாங்கம்
திபெத்திய பகுதிகளுக்கு வெளிநாட்டினரின் அணுகலை நிர்வகிக்கும் கொள்கைகளில் ஈடுபட்டுள்ள சீன அதிகாரிகள் மீது இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா கூடுதல் விசா கட்டுப்பாடுகளை விதித்த நிலையிலேயே சீனாவும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க தூதுவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற சர்வதேச பார்வையாளர்கள் திபெத் மற்றும் சீனாவின் பிற திபெத்திய பகுதிகளுக்குள் நுழைய சீன அரசாங்கம் மறுப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
மேலும் அமெரிக்க தூதுவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அந்தப் பகுதிகளுக்கு கட்டுப்பாடற்ற அணுகலையும் கோரியது. இந்த விவகாரம் தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவிக்கையில்,
திபெத் தொடர்பான பிரச்சினைகள் சீனாவின் உள் விவகாரங்களாகும். மட்டுமின்றி திபெத் தொடர்பாக சீன அதிகாரிகள் மீதான விசா கட்டுப்பாடுகளை அமெரிக்கா துஷ்பிரயோகம் செய்துள்ளது சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளை தீவிரமாக மீறும் செயலாகும்.
திபெத்திய விவகாரங்களில்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் திபெத்தின் மேற்குப் பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள், அவர்கள் குழுக்களாகப் பயணம் செய்ய முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அத்துடன், தூதர்களும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களும் அங்கு செல்ல திபெத்தின் உள்ளூர் அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
திபெத் திறந்தே இருக்கிறது. மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்களை திபெத்துக்கு வருகை தரவும், பயணம் செய்யவும், வணிகம் செய்யவும் சீனா வரவேற்கிறது என்றும் லின் கூறியுள்ளார்.
ஆனால் மனித உரிமைகள், மதம் மற்றும் கலாச்சாரம் என்ற பெயரில் திபெத்திய விவகாரங்களில் எந்தவொரு நாடும் அல்லது நபரும் தலையிடுவதை சீனா எதிர்க்கிறது என்றும் லின் தெரிவித்துள்ளார்.
நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்திலிருந்து அமைதியான விடுதலை என்று விளக்கமளித்து, 1950 இல் திபெத்தின் கட்டுப்பாட்டை சீனா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |