தைவானை சுற்றி வளைத்த சீன ராணுவம்: பிராந்தியத்தில் உச்சக்கட்ட பரபரப்பு!
தைவான் எல்லைப் பகுதியில் சீனா இராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ளது.
சீனா போர் பயிற்சி
பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக தைவானை சுற்றி வளைத்து இராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வருவதாக சீனா அறிவித்துள்ளது.
மேலும் இது தைவான் ஜனாதிபதிக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்றும் சீனா கூறியுள்ளது.
தைவானை சீனாவுடன் இணைக்க வேண்டும் என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால் சீனாவின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்து தைவான் தனி நாடு என்று அந்நாடு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில், சீனாவின் ராணுவ பயிற்சிக்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று தைவான் கூறியுள்ளது.
தைவான் இராணுவத்தின் பதில் நடவடிக்கை
சீனாவின் இராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தைவானும் தனது இராணுவத்தை தயார் நிலையில் வைத்துள்ளது.
மேலும், தைவான் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப்படை விமானங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |