ரஷ்யா போன்று... இந்த ஆண்டுக்குள் சீனா படையெடுக்கும்: உலகப் போர் பீதியை ஏற்படுத்தும் ராணுவ தளபதி
வெறும் பார்வையாளர்களாக உலக நாடுகள், தற்போதும் மூச்சுத் திணறலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
தைவான் மீதான சீனாவின் படையெடுப்பு என்பது உலகப் போருக்கான ஆயத்தமாக மாறக்கூடும்
தைவான் மீதான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறியுள்ள நிலையில், ரஷ்யா- உக்ரைன் போன்ற இன்னொரு இக்கட்டான சூழல் உருவாகி வருவதாக அமெரிக்க ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது தடாலடியாக படையெடுப்பை முன்னெடுத்த ரஷ்யா, தற்போது உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டுள்ளதுடன், அங்கே ராணுவ சட்டத்தையும் அமுலுக்கு கொண்டுவந்துள்ளது.
@getty
உக்ரைனின் கிரிமியா பகுதியை இதுபோன்று ரஷ்யாவுடன் விளாடிமிர் புடின் இணைத்துக்கொண்ட போது, வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்துள்ள உலக நாடுகள், தற்போதும் மூச்சுத் திணறலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால், தைவான் மீதான சீனாவின் படையெடுப்பு என்பது உலகப் போருக்கான ஆயத்தமாக மாறக்கூடும் என்று நம்புகிறார் அமெரிக்க கடற்படை நடவடிக்கைகளின் தலைவர் அட்மிரல் மைக் கில்டே.
@getty
மட்டுமின்றி, அந்த முடிவை சீனா இந்த ஆண்டுக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முன்னெடுக்கக் கூடும் எனவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
இதுவரையான தரவுகளின் அடிப்படையில், சீனா 2027க்குள் தைவானை தங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டுவரும் என அமெரிக்க அதிகாரிகள் கருதிவரும் நிலையில், சமீபத்தில் சீனத்து ஜனாதிபதி ஜி ஜின்பிங் நிகழ்த்தியுள்ள உரை அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளதாக கூறுகிறார் அட்மிரல் மைக் கில்டே.
@U.S Navy
கடந்த 20 ஆண்டுகளில், அவர்கள் நிறைவேற்றப் போவதாகச் சொன்னதை விட முன்னதாக அவர்கள் கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றியுள்ளனர் என சீனா தொடர்பில் குறிப்பிட்டுள்ளார் அட்மிரல் மைக் கில்டே.
மேலும், தைவான் மீதான படையெடுப்புக்கான ஆரம்ப பணிகளை சீனா முடித்துவிட்டிருக்கும் என்றே தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.