இன்னும் 2 வருடங்களுக்குள் போர்! தைவானை குறிவைக்கும் சீனா: அமெரிக்கா எச்சரிக்கை
இரண்டு வருடங்களில் தைவானை தாக்க சீனா திட்டமிடலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா எச்சரிக்கை
தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அது இரண்டு வருடங்களில் நடக்கக்கூடும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
தன்னாட்சி தீவான தைவானை, சீனா தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் கருதி வருகிறது. இதனால் பிரச்சினை நீண்ட காலமாக பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக அமெரிக்க கடற்படை அதிகாரி Admiral John Aquilino தெரிவித்துள்ள எச்சரிக்கையில், தனது ராணுவ பலத்தை விரைவாக சீனா வளர்த்து வருகிறது,இது 2027க்குள் தைவான் மீதான படையெடுப்பிற்கான தயாரிப்பாக இருக்கலாம்.
கடந்த ஆண்டில் இருந்து சுமார் 20 பெரிய போர்க்கப்பல்களுடன் 400 க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தயார் நிலையில் சீனாவின் PLA வைத்து இருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
மேலும் சீனா தனது பாதுகாப்பு ராணுவ செலவினங்களை அதிகரித்து இருப்பதையும் அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டு பேசியுள்ளார்.
சீனாவின் தேசிய செலவினங்களில் 16% அதாவது £175.95 பில்லியன் ($223 பில்லியன்) தொகையை இராணுவ படைகளின் மேம்பாட்டிற்கு சீனா ஒதுக்கியுள்ளது என்பதை மிரர்(Mirror) அறிக்கை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |