பெரும் விமானம் தாங்கிக் கப்பல்களை மூழ்கடிக்கும் ஏவுகணை... ஈரானும் சீனாவும் ஒப்பந்தம்
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளுக்கு ட்ரம்ப் எப்போது வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம் என்ற நிலையில், விமானம் தாங்கிக் கப்பல்களை மூழ்கடிக்கும் ஏவுகணைகளுக்கான ஒப்பந்தம் ஒன்றை சீனாவுடன் ஈரான் முன்னெடுத்துள்ளது.
CM-302 ஏவுகணை
ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா அச்சுறுத்தி வருவதுடன், மத்திய கிழக்கில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய இராணுவக் கட்டமைப்பை அமெரிக்கா குவித்து வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும், ஜூன் மாதத்தில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான 12 நாள் போர் அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்தியுள்ளது.
1980களில் ஈரானுக்கு சீனா ஒரு முக்கிய ஆயுத விநியோகஸ்தராக இருந்தது, ஆனால் சர்வதேச அழுத்தம் காரணமாக அடுத்த பத்தாண்டுகளில் அது சரிவடைந்தது.
ஆனால் தற்போது சீன தயாரிப்பான CM-302 ஏவுகணை ஒப்பந்தமானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இருப்பினும், எப்போது இந்த ஏவுகணை விநியோகிக்கப்படும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா
CM-302 ஏவுகணை மட்டுமின்றி, MANPADS எனப்படும் சீனாவின் தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்புகள், பாலிஸ்டிக் தடுப்பு ஆயுதங்கள், மற்றும் செயற்கைக்கோள் தடுப்பு ஆயுதங்கள் ஆகியவை தொடர்பிலும் சீனாவுடன் ஈரான் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
CM-302 என்ற இந்த சூப்பர்சோனிக் ஏவுகணைகள் சுமார் 290 கிலோமீற்றர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை. மேலும், கப்பல் போக்குவரத்து பாதுகாப்புகளைத் தவிர்த்து, தாழ்வாகவும் வேகமாகவும் பறக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

CM-302 ஏவுகணைகளை இணைத்துக் கொண்டால் ஈரானின் தாக்குதல் திறன் கணிசமாக மேம்படும். மட்டுமின்றி பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படைக்கு இது கடும் அச்சுறுத்தலாகவும் இருக்கும்.
மிகவும் மேம்பட்ட
மேலும், ஈரான் அந்தப் பகுதியில் கப்பல்களைத் தாக்கும் சூப்பர்சோனிக் ஏவுகணைத் திறனைக் கொண்டிருந்தால் அது ஒரு முழுமையான மாற்றமாகும். இந்த ஏவுகணைகளை இடைமறிப்பது மிகவும் கடினம் என முன்னாள் இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த ஏவுகணைகள் சீனாவால் ஈரானுக்கு வழங்கப்படும் மிகவும் மேம்பட்ட இராணுவ வன்பொருளில் ஒன்றாக இருக்கும், மேலும் 2006 ஆம் ஆண்டு முதன்முதலில் விதிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதத் தடையை மீறும்.

அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 2015 இல் தடைகள் இடைநிறுத்தப்பட்டு, கடந்த செப்டம்பரில் மீண்டும் விதிக்கப்பட்டன.
CM-302 ஏவுகணையை உலகின் சிறந்த கப்பல் தடுப்பு ஏவுகணையாக சந்தைப்படுத்துகிறது, இது ஒரு விமானம் தாங்கி கப்பலை மூழ்கடிக்கும் திறன் கொண்டது.
இந்த ஆயுத அமைப்பை கப்பல்கள், விமானங்கள் அல்லது நடமாடும் தரைவழி வாகனங்களில் பொருத்த முடியும். இது நிலத்தில் உள்ள இலக்குகளையும் தாக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |