புடினைக் கைவிட்ட நட்பு நாடு: ரஷ்யாவுக்கு மீண்டும் ஒரு பின்னடைவு
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் உலகம் முழுவதிலும் பகையை சம்பாதித்துக்கொண்டுள்ள ரஷ்யா, நட்பு நாடுகளின் ஆதரவையும் இழந்துவருவதாகத் தோன்றுகிறது.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில், அமெரிக்கா மீதான பகை முதலான காரணங்களால் நட்பு நாடுகளான சீனா ரஷ்யா நட்புக்கு, தற்போது உக்ரைன் போரால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆம், ரஷ்யாவுக்கு விமான உதிரி பாகங்களை வழங்க சீனா மறுத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தங்கள் விமானத்துறை, மேற்கத்திய நாடுகளின் தடைகள் காரணமாக பாதிக்கபட்டுள்ளதை மாஸ்கோ அலுவலர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
சீனா விமான உதிரிபாகங்களை வழங்க மறுத்துள்ளதைத் தொடர்ந்து, வேறு நாடுகளின் உதவியை நாட இருப்பதாக ரஷ்ய பெடரல் போக்குவரத்து ஏஜன்சி அலுவலரான Valery Kudinov என்பவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஊடுருவல் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாக தெரிவித்திருந்த சீனா, தற்போது ரஷ்யாவுக்கு விமான உதிரி பாகங்களை வழங்க மறுத்துள்ளது ரஷ்யாவுக்கு ஒரு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
ஆனாலும், உக்ரைன் ஊடுருவலைக் கண்டிப்பதைத் தவிர்த்துவரும் சீனா, இப்படி ஒரு நிலைக்கு ரஷ்யாவை ஆளாக்கியது நேட்டோ நாடுகளும் அமெரிக்காவும்தான் என குற்றம் சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.