உரிமையாளரிமிருந்து பூனைகளுக்கு பரவிய கொரோனா.. உள்ளூர் அதிகாரிகள் செய்த கொடூரச் செயல்! வெளிச்சத்திற்கு வந்த அதிர வைக்கும் சம்பவம்
சீனாவில் கொரோனா உறுதியான 3 வீட்டு பூனைகளை உள்ளூர் அதிகாரிகள் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன நகரமான ஹார்பினில் உள்ள அதிகாரிகளே இக்கொடூர செயலை செய்துள்ளனர்.
கொரோனா தொற்று உறுதியான விலங்களுக்கு சிகிச்சை இல்லாததால் பூனைகளை கொன்றோம்.
மேலும், பூனைகளின் உரிமையாளர்கள் மற்றும் சுற்றியுள்ள மற்ற குடியிருப்பாளர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாலும் இவ்வாறு செய்தோம் என அதிகாரிகள் கூறியதாக மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 21 அன்று, பூனைகளின் உரிமையாளர் Miss Liu-வுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதயாகியுள்ளது.
இதனையடுத்து, மூன்று பூனைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவிக்கவிட்ட நிலையில் Miss Liu தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
பின்னர் சுகாதார ஊழியர் பூனைகளுக்கு கொரோனா வைரஸ் சோதனைகளை மேற்கொண்டுள்ளார்.
சோதனைகளில் இரண்டு முறை 3 பூனைகளுக்கும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனிடையே உரிமையாளர் Miss Li, பூனைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கான ஆன்லைன் முறையீட்டை வெளியிட்டார், ஆனால் 3 பூனைகளையும் செவ்வாய்க்கிழமை மாலை அதிகாரிகள் கொன்றுள்ளனர்.
பூனைகள் கொல்லப்பட்ட செய்தி வெளியான நிலையில், அதிகாரிகன் இக்கொடூர செயலுக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வைரஸைக் கட்டுப்படுத்த சில நேரங்களில் சீனா எடுத்த தீவிர நடவடிக்கைகளுக்கு பூனைகளின் கொலை ஒரு எடுத்துக்காட்டு என நிபுணர்கள் கூறிகின்றனர்.
நெருங்கிய தொடர்பில் இருக்கும் சூழ்நிலைகளில் கொரோனா மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு தொற்றலாம், ஆனால் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவும் ஆபத்து குறைவாகக் கருதப்படுகிறது என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கின்றன.