மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் பூஸ்டர்- சீனா சாதனை
ரொக்கெட் பூஸ்டரை வெற்றிகரமாக தரையிறங்கி தரையிறக்கி சீனா முதல்முறையாக சாதனை படைத்துள்ளது.
சீனாவின் விண்வெளி திட்டத்தில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, China Aerospace Science and Technology Corporation நிறுவனம் Long March 10B ரொக்கெட்டை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது.
இந்த ரொக்கெட், ஹைனான் மாகாணத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 12:15 மணிக்கு ஏவப்பட்டது. ஏவுதலுக்குப் பிறகு சுமார் ஆறு நிமிடங்களில், ரொக்கெட்டின் புஸ்டர் பகுதி பூமிக்கு நேராக இறங்கி, கடலில் மிதக்கும் மேடையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

இது, அமெரிக்காவின் SpaceX மற்றும் Blue Origin நிறுவனங்களின் வெற்றிகரமான முயற்சிகளுக்கு பின், சீனாவும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் தொழில்நுட்பத்தில் முன்னேறியிருப்பதை காட்டுகிறது.
பொதுவாக ரொக்கெட்டுகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஏவுதலின் போது பல பகுதிகள் அழிக்கப்படுவதால் செலவுகள் அதிகரிக்கின்றன. ஆனால் புஸ்டர் பகுதியை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் செயற்கைக்கோள் ஏவுதல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியின் செலவுகளை குறைக்க முடியும்.

SpaceX நிறுவனம் 2015-இல் Falcon-9 ரொக்கெட்டை வெற்றிகரமாக தரையிறக்கியது. தற்போது Falcon-9 வருடத்திற்கு சுமார் 150 முறை ஏவப்படுகிறது. அதேபோல், Blue Origin நிறுவனம் 2025-இல் New Glenn ரொக்கெட்டை தரையிறக்கியது.
சீனாவின் Long March 10B ரொக்கெட், குறைந்தபட்சம் 16 மெட்ரிக் டன் பாரங்களை பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. Falcon-9 போல தானாக தரையிறங்காமல், “landing hooks” மூலம் கடலில் உள்ள மேடையில் வலைப்பிடியில் சிக்கி தரையிறங்குகிறது.

இந்த வெற்றிக்கு பின், சீனாவின் விண்வெளி நிறுவனங்களின் பங்குகள் 10% வரை உயர்ந்துள்ளன. இது, சீனாவின் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் இதே பூஸ்டரை பயன்படுத்தி மற்றொரு ஏவுதலை மேற்கொள்ளும் திட்டம் சீனாவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |