சீனாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு: 8 பேர் உயிரிழப்பு, டஜன் கணக்கானோர் மாயம்
சீனாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் இதுவரை 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் நிலச்சரிவு
வெள்ளிக்கிழமை தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரின் பெங்ஷுய் மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9.10 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 34 பேர் வரை காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட 18 பேர் மீட்கப்பட்டதாகவும், அதில் 8 பேர் உயிரிழந்து விட்டதாகவும் மாவட்ட தலைவர் ரென் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
மீட்பு பணிகள் தீவிரம்
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 800க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் தீவிர பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக அங்குள்ள ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் மலையடிவாரத்தில் அமைந்திருந்த வீடுகள் மற்றும் வணிக கடைகள் மண் மற்றும் பாறை சரிவில் மூடியிருப்பதை CCTV வெளியிட்ட காட்சிகளில் பார்க்க முடிகிறது.
மீட்பு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 50 மில்லியன் யுவான் தொகையை இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக அரசு ஒதுக்கியுள்ளது என்று நிதி மற்றும் அவசரகால மேலாண்மை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |