70 போர் விமானங்கள், 7 சீன கப்பல்கள்…தைவான் எல்லையில் மிகப்பெரிய ஊடுருவலை நடத்திய சீனா
தைவான் வான் பாதுகாப்பு எல்லைக்குள் கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டும் சீனா சுமார் 71க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அனுப்பி இருப்பதாக தைவான் அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
சீனா தைவான் இடையிலான பதற்றம்
உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய சில தினங்களிலேயே, சீனா தைவான் இடையிலான பதற்றம் அதிகரிக்க தொடங்கியது.
ஜனநாயக தைவான் சீனாவுக்கு திரும்ப வேண்டும் என்று சீன அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது, ஆனால் அதற்கு தைவான் மறுப்பு தெரிவிப்பதுடன், தங்கள் தீவு நாடு சுதந்திரமானது என்றும், "இரண்டு அரசாங்கம் ஒரே நாடு" என்ற திட்டத்தை முழுமையாக எதிர்ப்பதாகவும் அறிவித்தது.
Reuters
இதையடுத்து கடந்த சில மாதங்களாக தைவான் பாதுகாப்பு எல்லைக்குள் சீனா தொடர்ந்து விமானங்கள் அல்லது கப்பல்களை அனுப்பி தீவு நாட்டை அச்சுறுத்தி வருகிறது.
சீனாவின் மிகப்பெரிய ஊடுருவல்
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் உட்பட 70 க்கும் மேற்பட்ட சீன விமானங்கள் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்தன, அவற்றில் 43 தைவான் ஜலசந்தியின் இடைநிலைக் கோட்டைக் கடந்ததாக தைவான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தைவான் வான் பாதுகாப்பு வளையத்திற்குள் சீனா தனது மிகப்பெரிய ஊடுருவலைத் தொடங்கியுள்ளதாகவும் தைவான் அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
Chinese fighter jets(Xinhua /AP)
மேலும் தைவானுக்கு மிக அருகே 7 சீன கடற்படை கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சீன விமானங்களை தடுக்க போர் விமானங்களை அனுப்பியதாகவும், ஏவுகணை அமைப்புகள் நிலைமையை கண்காணித்ததாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தைவான் கூறும் இந்த இடைநிலைக் கோடானது, இரு தரப்பினருக்கும் இடையே உள்ள அதிகாரப்பூர்வமற்ற எல்லை பகுதியாகும், ஆனால் இதனை சீனா அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை.
71 PLA aircraft and 7 PLAN vessels around Taiwan were detected in our surrounding region by 6 a.m.(UTC+8) today. R.O.C. Armed Forces have monitored the situation and tasked CAP aircraft, Navy vessels, and land-based missile systems to respond these activities. pic.twitter.com/DagRhnN69F
— 國防部 Ministry of National Defense, R.O.C. ?? (@MoNDefense) December 26, 2022
அமெரிக்க-தைவான் விரிவாக்கத்திற்கான பதிலடி
இந்த இராணுவ நடவடிக்கையானது தற்போதைய அமெரிக்க-தைவான் இராணுவ விரிவாக்கம் மற்றும் சீனாவுக்கு எதிரான ஆத்திரமூட்டலுக்கு உறுதியான பதில் என்று சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஷி யி தெரிவித்தார்.
மேலும் தைவானுடன் கூடுதல் பாதுகாப்பு ஒத்துழைப்பை அங்கீகரித்த அமெரிக்க பாதுகாப்புச் செலவு மசோதா, சீனாவுக்கு எதிரான ஒரு மூலோபாய சவால் என்றும் ஷி தெரிவித்தார்.
AFP
இதற்கிடையில் தைவான் அதிபர் சாய் இங்-வென் திங்கள் கிழமை காலை ராணுவ அதிகாரிகளிடம் பேசும்போது, சீனாவை குறிப்பிடாமல் "எதேச்சாதிகாரத்தின் தொடர்ச்சியான விரிவாக்கம்" காரணமாக தைவானின் பாதுகாப்பு திறனை அதிகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.