உங்கள் தங்கத்தை உள்ளே போட்டால் 30 நிமிடங்களில் வங்கி கணக்கில் பணம்., புதிய தங்க ATM
சீனாவில் தங்கத்தை பரிசோதித்து 30 நிமிடங்களில் பணம் தரும் ATM அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காயில், உலகின் முதல் 'தங்க ATM' நிறுவப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன இயந்திரம், தங்க நகையை உருக்கி அதன் தூய்மை மற்றும் எடையை மதிப்பீடு செய்து, அந்த மதிப்பிற்கு இணையான தொகையை 30 நிமிடங்களில் வங்கி கணக்கிற்கு செலுத்துகிறது.
இந்த இயந்திரத்தை Kinghood Group இயக்குகிறது. தங்கத்தின் குறைந்தபட்ச எடை 3 கிராமும், 50 சதவீதத்திற்கும் அதிகமான தூய்மையை கொண்டிருக்க வேண்டும் என்பதே இவ்வியந்திரத்தின் விதிமுறை.
இதன் மூலம் உரிமையாளர்கள் தங்களுடைய தங்க நகைகளை எளிதில் பணமாக மாற்றிக் கொள்கிறார்கள்.
தற்போது, இந்த தங்க ATM அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதால், மே மாதம் வரை அனைத்து நேர தொகுப்புகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக Chinatimes.com தெரிவிக்கிறது.
ஒரு டெமோவில், 40 கிராம் தங்க சங்கிலி ஒன்றிற்கு கிராமுக்கு 785 யுவான் என மதிப்பீடு செய்யப்பட்டு, மொத்தமாக 36,000 யுவான் பெறப்பட்டது.
ஷாங்காய் தங்க சங்கத்தின் உறுப்பினர் ஸ்யு வெய்சின் கூறுவதாவது, “தங்க விலை ஏறி கொண்டிருப்பதால், பொதுமக்களின் கையிலிருக்கும் தங்கத்தின் மதிப்பும் உயர்ந்துள்ளது. இதனால், அவர்களுக்கு பணமாக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது” என்றார்.
இந்த தங்க ATM, இனி உலகின் பிற நாடுகளிலும் விரிவடையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |