தொடர்ந்து தங்கத்தை வாங்கி சேமிக்கும் சீனா., விற்கும் நிலையில் ரஷ்யா
China leads global gold buying in July: சீனா தொடர்ந்து தங்கத்தை வாங்கி கையிருப்பை அதிகரித்துவருகிறது.
சீன மத்திய வங்கி
உலகின் பல மத்திய வங்கிகள், குறிப்பாக சீனாவின் People’s Bank of China (PBoC), ஜூலை மாதத்திலும் தொடர்ந்து தங்கத்தை வாங்கியுள்ளதாக World Gold Council (WGC) தெரிவித்துள்ளது.

20 டன் தங்கம்
ஜூலையில் மொத்தமாக 23 டன் தங்கம் வாங்கப்பட்டதாக அறிக்கை கூறுகிறது. அதில் சீனா மட்டும் 20 டன் தங்கம் வாங்கியுள்ளது.
மே 2026 முதல் சீனாவின் தங்க வாங்கும் நடவடிக்கை வேகமடைந்துள்ளது. தொடர்ந்து 21 மாதங்களாக சீனா தங்கத்தை தனது கையிருப்பில் சேர்த்துக் கொண்டிருக்கிறது.
தற்போது, சீனாவின் தங்க கையிருப்பு 2,366 டன்களாக உயர்ந்துள்ளது. இது உலகளவில் ஆறாவது பெரிய கையிருப்பு ஆகும்.
மற்ற நாடுகள்
போலந்து 8 டன் தங்கம் வாங்கி, இந்த ஆண்டில் மொத்தமாக 90 டன் சேர்த்துள்ளது. போலந்து தனது இலக்கான 700 டன் கையிருப்பை அடைய முயற்சிக்கிறது.
மற்ற நாடுகளில், கசகஸ்தான், மலேசியா, போலிவியா ஆகியவை தலா 1 டன் தங்கம் வாங்கியுள்ளன. கசகஸ்தான் தனது மொத்த கையிருப்பில் 75 சதவீதம் தங்கமாக வைத்துள்ளது.
தொடர்ந்து தங்கத்தை விற்பனை செய்து வரும் ரஷ்யா
ஆனால், ரஷ்யா தொடர்ந்து தங்கத்தை விற்பனை செய்து வருகிறது. ஜூலையில் 6 டன் தங்கத்தை விற்றுள்ளது. இதுவரை 2026-இல் 50 டன் தங்கத்தை விற்றுள்ளது. ரஷ்யாவின் மொத்த கையிருப்பு 2,277 டன்களாக குறைந்துள்ளது.
துருக்கி மற்றும் உஸ்பெகிஸ்தான் தலா 1 டன் தங்கத்தை விற்றுள்ளன. உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் தங்க சந்தையை பாதித்துள்ளன.
2024 முதல் மத்திய வங்கிகளின் தங்க வாங்குதல் தங்க விலையை உயர்த்தியது. ஆனால், ஈரான் போருக்குப் பிறகு தங்கத்தின் விலை 20 சதவீதம் குறைந்துள்ளது.
ஜூலை மாத இறுதியில் தங்கம் ஒரு அவுன்ஸ் 4,444 டொலர் விலையில் விற்பனையாகியது. அமெரிக்கா-ஈரான் மோதல், வட்டி விகித உயர்வு, மற்றும் எரிசக்தி பொருட்களில் முதலீடு ஆகியவை தங்க விலையை பாதித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |