ஒரே நாளில் 23 பற்கள் பிடுங்கி 10 பற்களை சேர்த்த மருத்துவர்: மாரடைப்பில் பறிப்போன உயிர்!
சீனாவில் பல் மாற்று சிகிச்சை செய்து கொண்ட நபர் ஒருவர் 13 நாட்களுக்கு பிறகு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல் மாற்று சிகிச்சை வந்த விபரீதம்
சீனாவில் நோயாளி ஒருவருக்கு மருத்துவர் ஒரே நாளில் 23 பற்களை பிடுங்கி அகற்றியதோடு 12 பற்களை புதிதாக சேர்த்த 13 நாட்களுக்கு பிறகு, சம்பந்தப்பட்ட நோயாளி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த நபரின் மகள் இந்த சம்பவம் தொடர்பாக செப்டம்பர் 2ம் திகதி இணையதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து இது கவனம் பெற்றுள்ளது.
அந்த பதிவில், தன்னுடைய தந்தை ஆகஸ்ட் 14ம் திகதி Yongkang Deway பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டார்.
அப்போது அறுவை சிகிச்சை நிபுணர் அவரது 23 பற்களை பிரித்து எடுத்ததோடு அதே நாளில் 12 புதிய பற்களை உள் சேர்ப்பதற்கான சிகிச்சையையும் செய்து முடித்தார்.
இதையடுத்து தொடர் வலியால் துடித்து வந்த தனது தந்தை 13 நாட்களுக்கு பிறகு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார், அவர் இவ்வளவு விரைவாக உயிரிழப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று அதில் தெரிவித்துள்ளார்.
விசாரணை தீவிரம்
இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ள நிலையில், பல் மாற்று சிகிச்சை நடைபெற்று முடிந்து 13 நாட்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக Yongkang Municipal சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிளினிக்கின் ஊழியர் வழங்கிய தகவலில், தற்போது இதனை தங்களுடைய வழக்கறிஞர் குழு கவனித்து வருவதால் தங்களால் எத்தகைய தகவலும் வழங்க முடியாது, ஏதேனும் தகவல்கள் இருந்தால் அதனை எங்கள் அறிக்கைகள் வாயிலாக தெரிவிப்போம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வுஹானின் யுனிவர்சல் லவ் மருத்துவமனையின் பல் மருத்துவ மையத்தின் இயக்குனர் ஜியாங் குயோலின் Jimu News-க்கு வழங்கிய தகவலில், அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 10 பற்கள் மட்டுமே எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |