உலகின் முதல் மடிக்கக்கூடிய iPhone-ஐ உருவாக்கிய சீனர்! வைரல் வீடியோ
சீன மனிதர் உலகின் முதல் "மடிக்கக்கூடிய ஐபோனை" உருவாக்கியுள்ளார்.
மடிக்கக்கூடிய ஐபோனை எப்படி செய்தார் என்பதை தனது யூடியூப் வீடியோவில் விளக்குகிறார்.
சீன யூடியூபர் ஒருவர் உலகின் முதல் "மடிக்கக்கூடிய ஐபோனை" உருவாக்கியதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஐபோனின் உள் கூறுகள் மற்றும் Motorola Razr-ன் மடிக்கக்கூடிய கீலைப் பயன்படுத்தி இந்த சாதனத்தை உருவாக்க அவர் பலமுறை முயற்சி செய்துள்ளார். மடிக்கக்கூடிய ஐபோனை எப்படி உருவாக்கினார் என்பதை விளக்கி அந்த நபர் தனது யூடியூப் சேனலில் முழு செயல்முறையையும் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
வீடியோவில், அவர் வெவ்வேறு சாதனங்களிலிருந்து பாகங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை மீண்டும் அசெம்பிள் செய்து தனது சொந்த கஸ்டம் ஃபோனை உருவாக்குகிறார்.
அவர் ஐபோன் X-லிருந்து உள் கூறுகளை அகற்றி, அவற்றை மடிக்கக்கூடிய மோட்டோரோலா ரேஸ்ர் சேஸின் உள்ளே அடக்கியுள்ளார்.
வீடியோ சீன மொழியில் இருந்தாலும், ஆங்கில வசனங்கள் உள்ளன. இதனை உருவாக்கும் செயல்முறை மிகவும் கடினமானதாகவும் மற்றும் அதிக நேரத்தையும் எடுத்துக்கொண்டுள்ளது.
இதனை உருவாக்கும் முயற்சியில், திரைகளுக்காக பல போன்களை உடைத்து வீணடித்துள்ளார். முடிந்தவரை ஐபோனின் அசல் சாதனங்களிலிருந்து பல பகுதிகளைப் பயன்படுத்தியுள்ளார்.
இதில், Galaxy Z Flip போன்ற ஃபோன்களில் இருந்து பல கீல் வகைகளை மனிதர் சோதித்தார், ஆனால் அதன் "சிறிய" டிஸ்ப்ளே க்ரீஸுக்காக இறுதியில் Motorola Razr-ன் கீலைத் தேர்ந்தெடுத்தார்.
இறுதியில், அவர் உருவாக்கிய மடிக்கக்கூடிய ஐபோனில் உள்ள iOS தொடர்ந்து சாதாரணமாக செயல்பட்டது, மேலும் தொடு செயல்பாடு பாதிக்கப்படவில்லை.