வேலை இழப்பு, சம்பளம் குறைப்பு... ட்ரம்ப் வரிகளால் மோசமான நிலையை சந்திக்கும் ஒரு ஆசிய நாடு
அமெரிக்கா - சீனா இடையே நடந்து வரும் வர்த்தக மோதலின் விளைவாக, வேலை இழப்புகள், வணிக மூடல்கள் மற்றும் சம்பளம் குறைப்பு உள்ளிட்ட நெருக்கடிகளால் சீனா பெருமளவில் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லாபத்தை இழக்கும்
ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவால் தொடங்கப்பட்ட உலகளாவிய வர்த்தகப் போருக்கு மத்தியில், கடுமையான வரிகள் காரணமாக சீன நிறுவனங்கள் பல, குறிப்பாக தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த துறைகளில் லாபத்தை பெருமளவு இழக்கும் என்று ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
சீனாவின் உறுதியான அரசியல் நிலைப்பாடு காரணமாக பொருளாதார முன்னணியில் குறிப்பிடத்தக்க சவால்களை அந்த நாடு எதிர்கொள்ளவில்லை என்று தோன்றினாலும், மாற்றுச் சந்தைகளில் தனது இருப்பை விரிவுபடுத்துதல், உள்நாட்டு நுகர்வைத் தூண்டுதல் மற்றும் அதன் வர்த்தக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைப்பதன் மூலம் வர்த்தகப் போரை சமாளிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக ஆய்வறிக்கைகள் பதிவு செய்கின்றன.
இந்த நிலையில், சீனா மீதான அதிகரித்து வரும் வரிகள் காரணமாக, 25 சதவீதத்திற்கும் குறைவான வரிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்த முடிந்தால், அமெரிக்காவிற்கான அதன் ரசாயன ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கைப்பற்ற முடிந்தால்
மட்டுமின்றி, சீனா மற்றும் சிங்கப்பூர் தற்போது வைத்திருக்கும் சந்தைப் பங்கில் ஒரு பகுதியை கைப்பற்றுவதன் மூலம், அமெரிக்காவிற்கான ரசாயன ஏற்றுமதியில் இந்தியா தனது பங்கை அதிகரிக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த இரண்டு நாடுகளிலிருந்தும் அவர்களின் ரசாயன ஏற்றுமதி பங்கில் 2 சதவீதத்தை மட்டுமேனும் இந்தியா கைப்பற்ற முடிந்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 சதவீதத்தை அதிகரிக்க முடியும் எனவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளுக்கு சீனா தற்போது அதிக வரிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், மருந்துப் பொருட்கள் உட்பட ரசாயனப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா தலையிடுவதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |