அடுத்த இலங்கையாக மாறப்போகும் நாடு., சீனாவின் கடன் பொறியில் சிக்கும் மாலத்தீவு
சீனாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவு நெருக்கமாகிக்கொண்டே இருக்கும் நிலையில், அண்டை நாடான இலங்கையின் நிலையைக் கண்டும் மாலத்தீவுகள் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
மாலத்தீவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முகமது முய்சு தனது முதல் அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார்.
இந்தியாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில், சீனாவுடனான தனது உறவை விரிவுபடுத்தியுள்ளார்.
சீனா ஏற்கனவே பல நாடுகளை கடன் வலையில் சிக்க வைத்துள்ள நிலையில் தற்போது மாலத்தீவும் சிக்கியுள்ளது.
மாலத்தீவின் அண்டை நாடான இலங்கை சீனாவின் கடன் வலையில் சிக்கி பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. டொலர் இல்லாமல் கடனும் கட்டமுடியாமல் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க போராடி வருகிறது.
முய்சு தனது முழுத் தேர்தல் பிரச்சாரத்திலும் 'India Out' என்ற பெயரில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். மாலத்தீவின் இறையாண்மைக்கு இந்தியா அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கூறினார்.
அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்தே, கடன் அதிகரித்து வருவது குறித்து கவலைகள் எழுந்துள்ளன. முய்சு சீனாவில் இருந்து முதலீடு செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், பலவீனமான வளர்ச்சி காரணமாக மாலத்தீவுக்கு மேலும் கடன் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
PlayStation 5 controller மூலம் இயக்கப்படும் புதிய எலக்ட்ரிக் கார்., Sony-Honda இணைந்து உருவாக்கிய AFEELA EV
சீனாவில் அதிக கடன் உள்ளது
கடந்த மாதம் Observer Research Foundation வெளியிட்ட அறிக்கையின்படி, மாலத்தீவின் மொத்தக் கடனில் 60 சதவீதம் சீனா வளர்ச்சி வங்கி, சீனாவின் தொழில்துறை மற்றும் வணிக வங்கி மற்றும் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி ஆகியவற்றிலிருந்து வந்துள்ளது.
Asian Development Bankயின் கூற்றுப்படி, மாலத்தீவின் பொருளாதார வளர்ச்சி 2023-ல் 7.1 சதவீதமாக உள்ளது, இது 2022-ல் 13.9 சதவீதமாக இருந்தது.
"பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, முய்சு மேலும் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்" என்று US Institute of Peace-ல் visiting expertஆகா இருக்கும் Nilanthi Samaranayake கூறியுள்ளார்.
மாலத்தீவுக்கு எச்சரிக்கை
American Enterprise Institute சிந்தனைக் குழுவின் தரவுகளின்படி, 2014-ல் Belt and Road Initiativeல் சேர முடிவு செய்ததில் இருந்து சீன நிறுவனங்கள் மாலத்தீவில் கூடுதலாக 1.37 பில்லியன் டொலர் முதலீடு செய்துள்ளன.
முய்சுவின் சீனப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சீனாவுடனான அதன் நெருக்கம் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று உலக வங்கி அக்டோபர் அறிக்கை ஒன்றில் எச்சரித்துள்ளது. ஏனெனில் தொற்றுநோய்களின் போது மாலத்தீவில் உள்நாட்டு முதலீடு குறைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Maldives China relationship, china maldives friendship bridge, china maldives friendship bridge map, Sri Lanka china debt, Sri Lanka Economic crisis, China may lead to debt crisis in Maldives, China Sri Lanka Relationship