சீன இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ளும் கிம் ஜோங் உன் மகள்
கிம் ஜோங் உன்னின் மகள் சீனாவில் தனது தந்தையுடன் விஜயம் செய்துள்ள நிலையில், வட கொரியாவின் ஆட்சியைக் கைப்பற்ற அவர் தயாராகி வருவதாக வதந்திகள் பரவியுள்ளது.
வட கொரிய மக்களுக்கு
புதன்கிழமை நடைபெறும் 'வெற்றி நாள்' அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக கிம் மற்றும் அவரது மகள் கிம் ஜு ஏ செவ்வாய்க்கிழமை சீன தலைநகருக்கு வந்தனர்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனா மிகப் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு ஒன்றை முன்னெடுக்க உள்ளது. சிறப்பு விருந்தினர்களாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வடகொரியாவின் கிம் ஜோங் உன் கலலந்துகொள்கின்றனர்.
சுமார் 12 வயதுடையவராக கருதப்படும் கிம் ஜு ஏ, கிம்மின் இரண்டாவது குழந்தை என்றே கருதப்படுகிறார். 2022 நவம்பர் மாதம் ஊடகங்களுக்கும் வட கொரிய மக்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்ட கிம் ஜு ஏ, அவரது தந்தைக்குப் பிறகு 'பெரும்பாலும்' பதவியேற்கக் கூடியவராகக் கருதப்படுகிறார்.
இளம் கிம் தனது தந்தையின் பின்னால் காணப்படுவதுடன், கருப்பு நிற பேன்ட்சூட் அணிந்து, சிரித்த முகத்துடன் காணப்பட்டார். ரஷ்யாவின் விளாடிமிர் புடின் மற்றும் சீனாவின் ஜி ஜின்பிங் ஆகியோருடன் ஒரு பெரிய இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ளும் பொருட்டு வட கொரிய தலைவர் தனது கவச ரயிலில் பெய்ஜிங்கிற்கு வந்தார்.
நேரடி சவாலாக
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கிம் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும், மேலும் மேற்கத்திய நாடுகளுக்கு நேரடி சவாலாக மூவரும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்திக் கொள்ளும் வேளை இதுவென்றும் கூறபப்டுகிறது.
26 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் அணிவகுப்பில் கலந்து கொள்ளவிருக்கின்றனர், கிம் மற்றும் புடின் ஆகியோர் ஜின்பிங்குடன் இந்த விழாவை சிறப்பிக்க உள்ளனர்.
ஆட்சிக்கு வந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு, கிம் ஒரு பெரிய சர்வதேச கூட்டத்தில் பங்கேற்பது இதுவே முதல் முறை. மேலும், இந்த விழாவின் போது மூன்று தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்திப்பார்களா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |