மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட 10 மாதக் குழந்தை: உடலில் இருந்த 600 காயங்கள்
சீனாவில் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டநிலையில், அதன் உடலில் ஊசியால் குத்தப்பட்ட 600 காயங்கள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
10 மாதக் குழந்தை உடலில் இருந்த 600 காயங்கள்
சீனாவிலுள்ள Yunnan மாகாணத்தில், காய்ச்சல் மற்றும் வலிப்பு வந்து துடித்துக்கொண்டிருந்த 10 மாதக் குழந்தை ஒன்று மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அதன் உடலில் ஊசியால் குத்தப்பட்டதால் ஏற்பட்ட சுமார் 600 காயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அத்துடன், அந்தக் குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்தபோது, அதன் கழுத்துப் பகுதிக்குள் உடைந்த ஒரு ஊசி இருப்பதும் தெரியவரவே, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அதை அகற்றியுள்ளார்கள் மருத்துவர்கள்.
அந்த ஊசி துருப்பிடித்ததாலேயே குழந்தைக்கு காய்ச்சல் வந்துள்ளது.
விசாரித்தபோது, அந்தக் குழந்தையின் தாய், குழந்தைக்கு காய்ச்சல் ஜலதோஷம் என என்ன பிரச்சினை ஏற்பட்டாலும், அதற்கு அக்குபஞ்சர் முறையில் சிகிச்சையளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது தெரியவந்தது.
இன்னொரு மோசமான விடயம் என்னவென்றால், குழந்தை அழுது அடம்பிடிக்கும்போது, அதை தண்டிப்பதற்காகவும் குழந்தையை ஊசியால் குத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அந்தப் பெண்.
அவருக்கு தண்டனை ஏதாவது அளிக்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |