புழுக்கள், கரப்பான் பூச்சியில் தயாரிக்கப்பட்ட காபி - ஆர்வத்துடன் வாங்கி குடிக்கும் இளைஞர்கள்
புழுக்கள், கரப்பான் பூச்சியில் தயாரிக்கப்பட்ட பூச்சி காபியை இளைஞர்கள் ஆர்வமுடன் வாங்கி குடித்து வருகின்றனர்.
பூச்சி காபி
நாம் குடிக்கும் பானங்களில், எதிர்பாராத விதமாக பூச்சி இருப்பதை கண்டறிந்தால், அதை அருந்தாமல் அது குறித்து விற்பனையாளரிடம் புகார் அளிப்போம்.
ஆனால், சீனாவில் மஞ்சள் புழுக்கள் மற்றும் கரப்பான் பூச்சி கலந்து விற்கப்படும் காபியை இளைஞர்கள் ஆர்வமுடன் வாங்கி குடித்து வருகின்றனர்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் பூச்சிகளுக்கான அருங்காட்சியகம் ஒன்றில் உள்ள காபி கடையில் பூச்சி காபி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காபியின் மேல், கரப்பான் பூச்சி பொடி மற்றும் உலர வைக்கப்பட்ட மஞ்சள் நிற புழுக்கள் தூவப்பட்டு வழங்கப்படுகிறது.
இந்த ஒரு காபியின் விலை 45 யுவான்(இந்திய மதிப்பில் ரூ.560) ஆகும்.
காபியின் பலன்கள்
ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காபி தற்போது இணையத்தின் மூலம் வைரலாகி வருகிறது. நாளொன்றுக்கு 10 காபி விற்பனையாவதாக அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த காபி தீய்ந்த மற்றும் புளிப்பு சுவையில் உள்ளதாக அதனை குடித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதே போல் எறும்புகளால் தயாரிக்கப்பட்ட காபி பதிப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பாரம்பரிய சீன மருத்துவப்படி, கரப்பான் பூச்சிப் பொடியை இரத்த ஓட்டத்திற்கு உதவும் மருந்தாகப் பயன்படுத்தலாம் எனவும், புரதச்சத்து நிறைந்த மஞ்சள் உணவுப் புழுக்கள் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் எனவும் மருத்துவர்கள் நம்புகின்றனர்.
எவ்வளவு பணம் கொடுத்தாலும் இதை என்னால் குடிக்க முடியாது என பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |