சீனாவில் பரவுவது ஒரே ஒரு நோய்க்கிருமி அல்ல... எச்சரிக்கை விடுத்த மருத்துவர்
சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் மர்ம காய்ச்சலால் மருத்துவமனைகள் நிரம்பிவரும் நிலையில், அது ஒரே ஒரு நோய்க்கிருமி அல்ல, பல வகை என மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிபுணர்கள் தரப்பு பீதி
சீனாவின் பெய்ஜிங் மற்றும் லியோனிங்கில் நிமோனியாவின் உறுதி செய்யப்படாத பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நிபுணர்கள் தரப்பு பீதியடைந்துள்ளனர். மட்டுமின்றி, நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிரடியாக உயர்ந்து வருவதை அடுத்து, ProMED அமைப்பால் ஏற்கனவே தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
@getty
இந்த மர்ம காய்ச்சலுக்கு பல எண்ணிக்கையிலானோர் பதிக்கப்பட்டு மருத்துவமனைகளை நாடியுள்ளனர். இருமல் உள்ளிட்ட எந்த குறிப்பிடத்தக்க அறிகுறியும் இல்லை என்றும், ஆனால் தீவிரமான காய்ச்சல் மட்டுமே காணப்படுவதாக கூறுகின்றனர்.
தொடர்ந்து கண்காணித்து வருவதாக
சீனா தரப்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில், அசாதாரண சூழல் இல்லை என்றே உலக சுகாதார அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, அக்டோபர் மத்தியில் இருந்தே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் சீனா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது பெரும்பாலும் சிறார்களில் பரவும் இந்த மர்ம காய்ச்சலானது ஒரே ஒரு கிருமியல்ல எனவும், பல வகை நோய்க்கிருமிகள் காணப்படுவதாகவும் மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
@getty
இதனிடையே, உலக சுகாதார அமைப்பு இந்த மர்ம காய்ச்சல் தொடர்பில் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |