அத்துமீறும் சீனா..!இந்திய பகுதியை உள்ளடக்கிய 2023 சீன எல்லை வரைபடம் வெளியீடு
இந்திய பகுதிகளை உள்ளடக்கிய சீனாவின் நிலையான எல்லை வரை படத்தின் 2023ம் ஆண்டு பதிப்பை சீன அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
சீன எல்லை வரைபடம்
சீன அரசாங்கம் 2023ம் ஆண்டுக்கான புதிய நிலையான சீன எல்லை வரைபடத்தை வெளியிட்டுள்ளது, இதில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பகுதி முழுவதும் சீனாவின் ஒற்றை அங்கமாக காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வரைபடத்தில் தைவானையும் முழுதென் சீனக் கடல் பகுதிகளையும் தங்களுடைய எல்லைக்கு உட்பட்ட பகுதியாக சீனா அறிவித்துள்ளது.
China does a cartographic aggression in Indo Pacific, releases a new map claiming Indian territories, territories in South China sea & Taiwan. pic.twitter.com/ZK05AwDqkl
— Sidhant Sibal (@sidhant) August 28, 2023
சீனாவின் இயற்கை வள அமைச்சகத்தின் ஸ்டாண்டர்ட் மேப் இணையதளத்தில் இந்த 2023 சீன எல்லை வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது என சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டு அந்த புகைப்படத்தையும் X தளத்தில் (முன்னதாக ட்விட்டர்) பகிர்ந்துள்ளது.
இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி 20 மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கலந்து கொள்ள இந்தியா வர இருக்கும் நிலையில், முன்னதாக இந்த சீன எல்லை வரைபடம் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் சீனாவின் அத்துமீறல்
சீன அரசாங்கம் 1949ம் ஆண்டு முதலே எல்லை வரைபடங்கள் மூலமாக சீனா தனது ஆக்கிரமிப்பு மனப்பான்மையை வெளிகாட்டி வருகிறது.
kremlin.ru
அந்த வகையில் அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களை சீன மாற்றியது, இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனம் தெரிவித்தது.
மேலும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதி அதில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று இந்தியா பலமுறை தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |