சீனா-வட கொரியா இடையே புதிய பாலம்: வலுவடையும் இரு நாட்டு வர்த்தக உறவு
China North Korea New Bridge Open For Trade: சீனா மற்றும் வட கொரியாவை இணைக்கும் புதிய பாலம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
சீனா - வட கொரியா இடையே புதிய பாலம்
சீனா மற்றும் வட கொரியாவை இணைக்கும் எல்லையை கடந்த புதிய வர்த்தக பாலம் போக்குவரத்திற்காக அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டு இருப்பதாக சீன அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
சீனா - வட கொரியா இடையிலான வணிக உறவுகளை மேம்படுத்துவதில் இந்த புதிய பாலம் புதிய மைல் கல்லாக அமையும் என்று கருதப்படுகிறது.
சீனாவின் டான்டாங்(Dandong) நகரையும், வட கொரியாவின் சினுய்ஜு(Sinuiju) நகரையும் இந்த புதிய பாலம் இணைக்கிறது.

இருநாடுகளுக்கு இடையிலான தரைவழி வர்த்தகத்திற்காக கட்டப்பட்டுள்ள இந்த புதிய யாளு நதி பாலம்(New Yalu River Bridge) சுமார் 3 கிலோ மீட்டர் நீளம் கொண்டுள்ளது.
2014ம் ஆண்டே பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டிய இந்த பாலம், இருநாடுகளும் இடையே நிலவி வந்த அரசியல் பதற்றம் மற்றும் உறவு விரிசல் காரணமாக பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த பாலம் திறக்கப்பட்டுள்ளது.
தொடர் அணு ஆயுத திட்டங்கள் காரணமாக வட கொரியா எதிர்கொண்டு வரும் சர்வதேச தடைகளுக்கு மத்தியில், இந்த புதிய பாலம் பயன்பாட்டிற்கு வந்து இருப்பது வட கொரியாவின் முதன்மை பொருளாதார கூட்டாளியாக சீன திகழ்கிறது என்பதை காட்டுகிறது.