கொரோனா வைரஸ் பற்றி தகவல் கொடுத்தால் ரூ11 லட்சம் பரிசு! பிரபல நாட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு
சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து தகவல் கொடுத்தல் ஆயிரக்கணக்கான டாலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வுஹான் நகரில் கொரோனா வைரஸ் முதல் முதலாக தோன்றியது.
கொரோனா இரண்டாம் அலையின் கோர தாண்டவத்துக்குப் பின் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்துசேரும் விதமாக சில நாட்களாக சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவ தொடங்கிய பகுதிகள் குறித்து தகவல் கொடுத்தால் ஆயிரக்கணக்கான டாலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என சீனாவில் உள்ள ஒரு நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சீனா - ரஷ்யா எல்லைப் பகுதியில் உள்ள ஹெய்ஹெ நகர நிர்வாகம் கொரோனா பரவல் குறித்து தகவல் தருபவர்களுக்கு 100,000 யுவான் (சுமார் 11.58 லட்சம் ரூபாய்) பரிசு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.