ஆபரேஷன் சிந்தூர்: அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறோம் - சீனா
ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்துகிறது.
'ஆபரேஷன் சிந்தூர்'
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய இராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' ஏவுகணை தாக்குதலை தொடங்கியுள்ளது.
இதில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களை துல்லியமாக குறி வைத்து தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது.
அதே சமயம் இந்தியாவின் 5 விமானங்களை தங்கள் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்தியப் படைகள் மேற்கொண்ட "ஆபரேஷன் சிந்தூர்"-க்குப் பிறகு அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்து கவலைகொள்வதாக சீனா கூறியுள்ளது.
நாங்கள் அழைப்பு விடுகிறோம்
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இன்று காலை இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து சீனா வருத்தம் தெரிவிக்கிறது மற்றும் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து கவலை கொண்டுள்ளது. சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது.
இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கவும், அமைதியாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும்.
நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்கவும் நாங்கள் அழைப்பு விடுகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |