அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி... ஜேர்மனியின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான ஆசிய நாடு
2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி ஜேர்மனியின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா முந்தியுள்ளது.
வர்த்தக பங்காளியாக
வெளியான தரவுகளின் அடிப்படையில், ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீனாவுடனான ஜேர்மனியின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மொத்தம் 190.7 பில்லியன் டொலர் என்று தெரிய வந்துள்ளது.
அதே வேளை, அமெரிக்காவுடனான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மொத்தம் 189 பில்லியன் டொலர் என சரிந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் அமெரிக்கா ஜேர்மனியின் சிறந்த வர்த்தக பங்காளியாக இருந்தது, சீனாவின் எட்டு ஆண்டுகால தொடர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அரசியல் வேறுபாடுகளைக் காரணம் காட்டி, சீனா முன்னெடுப்பது நியாயமற்ற நடைமுறைகள் என்று குற்றம் சாட்டி, ஜேர்மனி சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முயற்சிகள் முன்ன்3எடுத்து வந்தது.
ஆனால் இந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்புக்கு வந்ததும், அவரது புதுப்பிக்கப்பட்ட வரி விதிப்பும் வர்த்தக செயற்பாடுகளில் மீண்டும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் தேவை
ட்ரம்பின் இந்த வரிகள் அமெரிக்காவிற்கான ஜேர்மன் ஏற்றுமதியைக் குறைத்தது. 2024 உடன் ஒப்பிடும்போது ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 7.4 சதவீதம் குறைந்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதியும் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பிடுகையில் 23.5 சதவீதம் சரிந்தது, இது இந்தப் போக்கு வேகமாகி வருவதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
மட்டுமின்றி, கார்கள், இயந்திரங்கள் மற்றும் ரசாயனங்கள் போன்ற பாரம்பரிய ஜேர்மன் ஏற்றுமதி பொருட்களுக்கான அமெரிக்காவின் தேவையும் ட்ரம்ப் வருகையை அடுத்து குறைந்துவிட்டது.
மேலும், தற்போதைய வரி அச்சுறுத்தல் மற்றும் வலுவான யூரோ ஆகியவற்றால், அமெரிக்காவிற்கான ஜேர்மன் ஏற்றுமதிகள் எந்த நேரத்திலும் மீண்டும் உயர வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் கருத்தாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |