ஹோம்வர்க்.. டியூசனுக்கு தடை! புதிய சட்டம் இயற்றிய பிரபல நாடு
ஹோம்வர்க் மற்றும் டியூசன் என மாணவர்களின் இரண்டு அழுத்தங்களை குறைக்க சீனா கல்விச் சட்டத்தை நிறைவேற்றியது.
இளைஞர்கள் அன்லைன் கேம்களுக்கு அடிமையாவதை தடுக்கவும், இணையப் பிரபலங்கள் மீதான குருட்டு தனமான அபிமானத்தை கட்டுப்படுத்த சீன இந்த ஆண்டு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
சமீபத்தில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மட்டும் வெறும் ஒரே ஒரு மணிநேரம் தான் சிறுவர்கள் அன்லைன் கேம்கள் விளையாட அனுமதி என கல்வி அமைச்சம் அறிவித்தது.
குழந்தைகள் மிகவும் தவறான நடத்தை மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் பெற்றோர்களை தண்டிக்கும் வகையில் சட்டத்தை பரிசீலிப்பதாக சீன நாடாளுமன்றம் திங்களன்று கூறியது.
இந்நிலையில் சீனவில் புதிததாக நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டம், மாணவர்களின் அழுத்தத்தை குறைக்கப்படுவதை உறுதி செய்ய உள்ளூர் அரசாங்கங்களை பொறுப்பேற்கச் செய்கிறது.
மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நேரத்தை ஓய்வு மற்றும் உடற்பயிற்சிக்காக செலவிட ஏற்பாடு செய்யும்படி கோரியுள்ளது.
இந்த புதிய சட்டம் இது ஹோம்வர்க்கை குறைத்து, வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் முக்கிய பாடங்களுக்கு பள்ளிக்குப் பிறகு டியூசன் கற்பிப்பதை தடைசெய்கிறது.