வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நகைகள்: போட்டி போட்டு தேடும் மக்கள்
சீனாவில் சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நகைக்கடை ஒன்றிலிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் அடித்துச் செல்லப்பட்டன.
போட்டி போட்டு தேடும் மக்கள்
சீனாவின் Shaanxi மாகாணத்தில் இம்மாதம் 25ஆம் திகதி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது Ye என்பவருக்குச் சொந்தமான நகைக்கடை ஒன்றிற்குள் பெருவெள்ளம் புகுந்துள்ளது.
சுமார் 20 கிலோ தங்கம், வைரங்கள், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த கற்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு 10 மில்லியன் சீன யுவான் ஆகும். இலங்கை மதிப்பில் அது 42,13,36,852.66 ரூபாய்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நகைகளை கடை ஊழியர்கள் இரண்டு நாட்களாக தேடியும், சிலர் தங்கள் கையில் கிடைத்த நகைகளைத் திருப்பிக் கொடுத்தும், ஒரு கிலோ நகை மட்டுமே கிடைத்ததாக தெரிவிக்கிறார் Yeயின் மகனான Xiaoye.
இதற்கிடையில், நகைகடையில் நகைகள் அடித்துச் செல்லப்பட்ட தகவல் வெளியே பரவ, பொதுமக்கள் நகைகளைக் கண்டுபிடிக்கக் குவிந்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், நகைகளைக் கண்டெடுத்தவர்கள் அவற்றை திருப்பிக் கொடுக்கவில்லை என்கிறார் Xiaoye.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |