அமெரிக்க டொலருக்கு மாற்றாக யுவான்-சீனாவின் அதிரடி திட்டம்
அமெரிக்க டொலருக்கு மாற்றாக தங்கள் நாட்டின் கரன்சியான யுவானை உலகமயமாக்க சீனா சில அதிரடி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க டொலர் ஆதிக்கம் செலுத்துவது ஏன்?
இரண்டாம் உலகப்போரின் போது பலவீனமடைந்த நாடுகளுக்கு அமெரிக்கா கடனுதவி செய்தபோது ஏற்பட்ட மாற்றத்தால் தான், அமெரிக்காவின் பணமான டொலர் (USD) சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அப்போதிலிருந்து தற்போது வரை அந்நிய செலாவணி சந்தையின் மொத்த வரம்பில் 85 சதவிகிதத்திற்கும் அதிகமான இடத்தை அமெரிக்க டொலர் தான் பிடித்து வைத்துள்ளது. இப்படி இருக்கையில் அமெரிக்காவின் இந்த பிடிப்பை தளர்த்த சீனாவும், ரஷ்யாவும் தொடர்ந்து முயன்று வருகின்றன.
Getty Images
சீனா அதிரடி நடவடிக்கை
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக சீனா அதன் யுவானை சர்வதேச நாணயமாக மாற்ற தற்போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
அதன்படி, இதுவரை அமெரிக்க டொலரில் வர்த்தகம் செய்து வந்த சுமார் 24 பாரிய நிறுவனங்கள் யுவானில் வர்த்தகம் செய்யவுள்ளன. இந்த வர்த்தகம் வரும் 19-ஆம் திகதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Photo: Xinhua
யுவானை சர்வதேச நாணயமாக மாற்ற இந்த பெரும் நிறுவனங்கள் யுவானில் வர்த்தகம் செய்வதன் மூலம் மற்ற சிறு குறு நிறுவனங்களும் யுவான் பக்கம் சாய வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இந்த வர்த்தக மாற்றத்தை தொடங்கும் 24 நிறுவனங்களில் அலிபாபா (Alibaba) மற்றும் டென்சென்ட் (Tencent) ஆகிய நிறுவனங்களும் அடங்கும்.
இந்நிறுவனங்கள் 19-ஆம் திகதி முதல், ஹொங்ஹொங் பங்குச் சந்தையில் (HKEX) டூயல் கவுண்டர் மாடலின் கீழ் யுவான் மற்றும் ஹொங்ஹொங் டொலர் இரண்டிலும் வர்த்தகத்தில் ஈடுபடும்.
Getty Images
இதன்மூலம் சீனாவுக்கு வெளியேயும் யுவானின் பயன்பாடு அதிகரிக்க செய்யும். ஆனால் இந்த மாற்றத்தால் சில சிக்கல்களும் எழ வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், சீனாவின் நோக்கம் சர்வதேச வர்த்தகத்தில் டொலரை மட்டுமே நம்பியிருப்பதை தவிர்ப்பதுதான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |