சீன விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட மெஸ்ஸி., பாஸ்போர்ட், விசா பிரச்சினையால் ஏற்பட்ட எதிர்பாராத சிக்கல்
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சீனாவில் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
சீன விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட மெஸ்ஸி
சர்வதேச போட்டிக்காக ஜூன் 10-ஆம் திகதி சீன தலைநகர் பெய்ஜிங் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
விமான நிலையத்தில் உடனடியாக மெஸ்ஸியை சுற்றி வளைத்த சீன எல்லை பொலிஸார், அவரை வெளியேற அனுமதிக்கவில்லை.
விசா தொடர்பான பிரச்சனை
பெய்ஜிங்கில் உள்ள ஒர்க்கர்ஸ் ஸ்டேடியத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச போட்டியில் அர்ஜென்டினா விளையாடுகிறது. அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி. இதற்கிடையில் விசா தொடர்பான பிரச்சனைகள் காரணமாக அவர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மெஸ்ஸி ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரண்டு பாஸ்போர்ட்களை வைத்திருக்கிறார். அர்ஜென்டினா பிரஜையான மெஸ்ஸி, தனது கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பயணிக்க வேண்டியிருந்தது. ஆனால் அர்ஜென்டினா பாஸ்போர்ட்டில் சில பிரச்சனைகள் இருந்ததால் தான் ஸ்பெயின் பாஸ்போர்ட்டில் பயணம் செய்துள்ளார்.
Lionel Messi fue detenido por un par de horas a su llegada a China por no tener el visado necesario para ingresar al país.
— Miguel Rapetti (@MiguelRapetti) June 12, 2023
El 10 no sabía que necesitaba visa para viajar y al final las autoridades le gestionaron un permiso especial para dejarlo ingresar. pic.twitter.com/6hXCrHL0Sg
விசாவிற்கு விண்ணப்பிக்கவில்லை
ஸ்பெயின் பாஸ்போர்ட் தைவானுக்கு விசா இல்லாத நுழைவை அனுமதிக்கிறது, ஆனால் மெஸ்ஸி அது சீனாவிற்குப் பொருந்தும் என்று தவறாகப் புரிந்துகொண்டு விசாவிற்கு விண்ணப்பிக்கவில்லை, இதன் விளைவாக அவர் பெய்ஜிங் வந்தவுடன் தடுத்து வைக்கப்பட்டார்.
இதன் பிறகு, மெஸ்ஸி சுமார் முப்பது நிமிடங்கள் விமான நிலையத்திலேயே இருந்தார். அதன்பிறகு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரி பிரச்சனையை சமாளித்து கொண்டிருந்தார். பின்னர் மெஸ்ஸிக்கு நுழைவு விசா வழங்கப்பட்டது. அவர் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார்.
வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
மெஸ்ஸியை பொலிஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தும் காட்சிகளும் வெளியாகின. மெஸ்ஸி தனது பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு சக வீரர்களுடன் பேசுவதைக் காணலாம். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, மெஸ்ஸி ஸ்பெயின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தியதால் இந்த சிக்கல்கள் ஏற்பட்டன. அர்ஜென்டினா பாஸ்போர்ட் பயன்படுத்தப்பட்டிருந்தால், நடிகர் முதலில் விமான நிலையத்தை விட்டு வெளியேறியிருப்பார். அவரிடம் அர்ஜென்டினா பாஸ்போர்ட் இல்லாததால் விமான நிலையத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.