வேலையில்லாத விரக்தியில்... சாலையில் சென்ற 6 பேரை சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர்! பதபதைக்க வைக்கும் வீடியோ
சீனாவில் கத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவனை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை சீனாவின் Anqing நகரில் பரபரப்பான கடைகள் நிறைந்த தெருவில் நடந்த சென்ற பாதசாரிகளை மர்ம நபர் ஒருவன் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த அதிகாரிகள் தாக்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் 25 வயதான இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
வேலை இல்லாத இளைஞர், குடும்பம் நடத்த முடியாத கோபத்தில், நம்பிக்கை இழந்து விரக்தியில் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக Anqing நகர கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
பதபதைக்க வைக்கும் வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்...
மேலும், காயமடைந்த 14 பேரில் ஒருவரின் நிலைமை கவலைகிடமாக உள்ளது எனவும், மற்றவர்கள் உடல்நிலை சீராக உள்ளதாக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.