சீனாவின் மொத்த மக்களையும் குடியமர்த்தினாலும் இன்னும் மீதமிருக்கும் வீடுகள்: வல்லரசு நாட்டின் நிலை
சீனா முழுவதும் உள்ள அனைத்து காலி குடியிருப்புகளையும் நிரப்ப நாட்டின் மொத்த மக்கள்தொகையும் போதுமானதாக இருக்காது என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கட்டுமான சந்தை நெருக்கடியில்
சீனாவின் கட்டுமான சந்தை தற்போது கடும் நெருக்கடியில் உள்ளது என்பதை வெளிச்சமிட்டு காட்டுவதாக உள்ளது அந்த அதிகாரியின் கருத்து என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
@insider
சீன பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ஒரு காலத்தில் குறிப்பிடப்பட்ட கட்டுமான சந்தையானது 2021க்கு பின்னர் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. சீனாவின் கட்டுமான ஜாம்பவான் Evergrande குழுமம் திவாலான நிலையிலேயே இந்த நெருக்கடி உச்சம் கண்டு வருகிறது.
இன்னொரு மிகப் பெரிய நிறுவனமான Country Garden Holdings திவாலாகும் விளிம்பில் உள்ளது என கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, விற்கப்படாத வீடுகளின் மொத்த பரப்பளவு 648 மில்லியன் சதுர மீற்றராக உள்ளது.
@insider
அதாவது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கணக்கீடுகளின்படி, சராசரி வீட்டின் அளவு 90 சதுர மீற்றர் என்ற அடிப்படையில் தற்போது 7.2 மில்லியன் குடியிருப்புகள் காலியாக உள்ளது என தெரியவந்துள்ளது.
3 பில்லியன் வீடுகள்
மேலும், கட்டுமானம் தொடங்கும் முன்னர் விற்கப்பட்ட வீடுகள் இந்த கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. மட்டுமின்றி, நிதி பற்றாக்குறையால் அப்படியான கட்டுமானங்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
@insider
மேலும், 2016ல் வாங்கப்பட்ட பல குடியிருப்புகளும் தற்போதும் குடியிருக்க ஆளின்றி காலியாகவே உள்ளது என்கிறார்கள். இதனால், தற்போதைய நிலவரப்படி சீனாவில் காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை என்பது ஓவ்வொருவரும் ஒரு கணக்கை வெளியிடுகின்ற நிலை உள்ளது.
இதில் மிகவும் துல்லியமான எண்ணிக்கை என்பது, சீனாவில் தற்போது 3 பில்லியன் வீடுகள் குடியிருக்க ஆளின்றி காலியாக உள்ளது என்றே தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |