ஹார்முஸ் விவகாரம்: சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து
ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டதால் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மகிழ்ச்சியடைந்து இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
திறக்கப்பட்ட ஹார்முஸ்
இஸ்ரேல்-லெபனான் இடையே 10 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ள இருதரப்பும் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும், இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நிலைநாட்ட உதவும் என்று டிரம்ப் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல்-லெபனான் அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹார்முஸ் நீரிணை திறக்கப்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டதால் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மகிழ்ச்சியடைந்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் தன்னுடைய சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஹார்முஸ் திறக்கப்பட்டதால் சீன ஜனாதிபதி மகிழ்ச்சியடைந்துள்ளார்.
President Xi is very happy that the Strait of Hormuz is open and/or rapidly opening. Our meeting in China will be a special one and, potentially, Historic. I look forward to being with President Xi — Much will be accomplished! President DONALD J. TRUMP
— Commentary: Trump Truth Social Posts On X (@TrumpTruthOnX) April 18, 2026
(TS: 17 Apr 22:25 ET)…
மேலும் சீனாவில் நடைபெறவுள்ள ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு சிறப்புமிக்கதாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமையும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்க நானும் ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் பல சாதனைகள் நிகழ்த்தப்படும் என்றும் டிரம்ப் அதில் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |