போர் மூலம் அதிக பணம் சம்பாதிக்கும் சீனா: 44 நாடுகளுக்கு ஆயுதங்கள் விநியோகம்
போர் மூலம் பணம் சம்பாதிக்கும் ஆபத்தான மிலிட்டரி டீலராக சீனா உருவெடுத்துள்ளது.
அரபு நாடுகள் முதல் ஆப்பிரிக்கா வரை, ரஷ்யா முதல் பாகிஸ்தான் வரை நடக்கும் போர்களால் அதிகம் லாபம் காணும் நாடாக சீனா மாறியுள்ளது.
போரின்போது ஆயுதங்களை விற்பனை செய்து கோடிக்கணக்கான டொலர்கள் சம்பாதிக்கும் நாடாக இது திகழ்கிறது.
SIPRI ஆய்வுக்கழகத்தின் அறிக்கை
ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (SIPRI) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த சில ஆண்டுகளில் 44 நாடுகளுக்கு சீனா ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இதில் 63% ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கே விற்பனை செய்யப்பட்டுள்ளன. JF-17 போர்விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் வான் பாதுகாப்பது அமைப்புகள் இதில் அடங்கும்.
சீனா-பாகிஸ்தான் ராணுவ கூட்டணி
சீனாவின் ராணுவ உற்பத்தியில் பாகிஸ்தானுக்கு தனிச் சாதனையாக இருப்பது, இந்தியாவை நேரடியாக சவாலிடும் வகையில் செயல்பட உதவுகிறது.
ஆனால் இவை பாகிஸ்தானை தொழில்நுட்ப தன்னிறைவை அடைய விடாமல், சீனாவை சார்ந்துபோகும் நிலைக்கு தள்ளுகிறது.
பாகிஸ்தானில் தயாராகும் ஆயுதங்களை சீன பொறியியலாளர்கள் இயக்குகிறார்கள், பாகிஸ்தானியர்கள் வெறும் தொழிலாளர்களாகவே உள்ளனர்.
ரஷ்யா-உக்ரைன் போரிலும் சீன பார்ட்னர்ஷிப்
பொதுவாக ஆயுதங்களை வழங்கவில்லை எனச் சொல்லும் சீனா, உண்மையில் இரட்டை பயன்பாடு உபகரணங்களை (machine tools, electronics) ரஷ்யாவிற்கு வழங்கி வருகிறது. இந்த வழியிலேயே சீனா ரஷ்யாவின் போர்சாதன உற்பத்தியை ஓரளவிற்கு காப்பாற்றுகிறது.
மத்திய கிழக்கு, ஹவுதி கிளர்ச்சிக்காரர்கள்
ஹமாஸ், ஹவுதி போன்ற அமைப்புகளுக்கும் சீனா ஆயுதங்களை விநியோகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனக் கப்பல்களை தாக்காத நிபந்தனையில் இந்த ஒப்பந்தங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China arms exports, SIPRI China weapons report, China Pakistan military ties, China role in Ukraine war, China arms Middle East rebels, Houthi rebels Chinese weapons, China dual use tech Russia, JF-17 China Pakistan jets, Global arms trade China, Chinese weapons in conflicts