ஈரானுக்கு இனி சீனா ஆயுதங்களை வழங்காது: டிரம்பிற்கு ஜி ஜின்பிங் அளித்த வாக்குறுதி
ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்க மாட்டோம் என்று சீனா உறுதியளித்து இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா
கடந்த பிப்ரவரி 28ம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடவடிக்கையை தொடங்கினர்.
இதில் ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உட்பட பல ஈரானிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்ததை அடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சீனா ஆயுதங்கள் வழங்காது
அமெரிக்காவின் இந்த இராணுவ நடவடிக்கையில் ஈரானுக்கு ஆதரவாக சீனா ஆயுத உதவிகளை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்க மாட்டோம் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உறுதியளித்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீன ஜனாதிபதி தான் நேரடியாக கடிதம் எழுதியதாகவும், அதற்கு சீனா சாதகமான பதிலை கொடுத்து இருப்பதாகவும் டிரம்ப் பதிலளித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் தன்னுடைய சீன பயணத்தின் போது அதிபர் ஜி ஜின்பிங் தன்னை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பார் என்று நம்பிக்கை இருப்பதாகவும், ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு சீனா தனது ஆதரவை தெரிவித்து இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |