உலகின் புதிய வகை பறவை காய்ச்சல்! அடையாளம் காணப்பட்ட முதல் நபர்
சீனாவில் H3N8 வகை பறவை காய்ச்சல் சிறுவனுக்கு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வகையான பறவை காய்ச்சல் தாக்கிய முதல் மனிதராக இந்த 4 வயது சிறுவன் அறியப்படுகிறார். காய்ச்சல் உட்பட பல அறிகுறிகளுடன் சிறுவனுக்கு H3N8 பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் Henan மாகாணத்தை சேர்ந்த சிறுவனுக்கு H3N8 பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வகை காய்ச்சல் மக்கள் மத்தியில் பரவும் அபாயம் குறைவு தான். அந்த சிறுவன் தனது வீட்டில் கோழிகள் மற்றும் காகங்களை வளர்த்து வந்துள்ளான்.
இந்த மாறுபாடு இன்னும் மனிதர்களை அதிகம் பாதிக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை, மேலும் பெரிய அளவிலான தொற்றுநோய்க்கான ஆபத்தையும் கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.