சீனாவில் மீண்டும் உச்சம் பெறும் கொரோனா பரவல்: டாக்ஸி சேவைகள் ரத்து
சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 76-ஐ கடந்துள்ளதாகவும், இதனால் பாதிப்பு கண்டறியப்பட்ட கிழக்கு நகரமான நாஞ்சிங்கில் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, மொத்தமாக பரிசோதனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், நகரில் இருந்து டாக்ஸி சேவைகள் எதுவும் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வுஹான் பேரிடருக்கு பிறகு, சீனா நிர்வாகம் கொரோனா பரவல் தொடர்பில் அதி தீவிர நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகிறது.
பாதிப்புக்கு உள்ளானவர்களை உடனடியாக கண்டறிவதும், பரவலுக்கான காரணம் தெரிந்து கொண்டு துரிதமாக செயல்பட்டு மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கின்றனர்.
சீனாவில் ஒரு நாளைக்கு முன்பு 5 என பதிவாகியிருந்த பாதிப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 40 என அதிகரித்துள்ளது.
இதில் Jiangsu பிராந்தியத்தில் மட்டும் 39 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த 39 எண்ணிக்கையில் 38 நாஞ்சிங் பகுதியிலேயே பதிவாகியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.