அடுத்த 40 நாட்கள்... நாட்டின் பெரும்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதித்த சீனா

China Taiwan
By Arbin Apr 08, 2026 06:08 AM GMT
Report

தைவான் மீதான படையெடுப்பு எந்நேரமும் நிகழலாம் என்ற அச்சம் வலுத்து வரும் நிலையில், சீனா அடுத்த 40 நாட்களுக்கு வான்வெளியின் பெரும் பகுதிகளை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒத்திகை பார்க்க

நாட்டின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதிக்கு அப்பாலுள்ள ஐந்து மண்டலங்களுக்குள் விமானங்கள் நுழைவதைத் தடுப்பதன் பின்னணி குறித்த எவ்வித விளக்கத்தையும் சீனா வெளியிடவில்லை.

அடுத்த 40 நாட்கள்... நாட்டின் பெரும்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதித்த சீனா | China Restricts Airspace 40 Days

ஆனால் சீனாவின் இந்த மர்மமான நடவடிக்கையானது தைவானைக் கைப்பற்றுவதற்குத் தேவையான வான்வழிப் போர் உத்திகளை ஒத்திகை பார்க்க முன்னெடுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

பொதுவாக மக்கள் விடுதலை இராணுவம் எனப்படும் சீனாவின் இராணுவம் வான்வெளியை ஒரே நேரத்தில் சில நாட்களுக்கு மட்டும் முடக்கிவிட்டு, இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காகவே அவ்வாறு செய்திருப்பதாக அறிவிப்பதுண்டு.

ஆனால் தற்போது பயிற்சிகள் குறித்து அறிவிக்காமல், இவ்வளவு நீண்ட நாட்கள் மிகப் பெரிய பகுதி முழுவதும் விமானப் பறப்புத் தடை என்பது நிபுணர்களைக் கவலையடையச் செய்துள்ளது.

ஈரான் விதித்த 10 நிபந்தனைகள்... மறுப்பேச்சின்றி ஒப்புக்கொண்ட ட்ரம்ப்

ஈரான் விதித்த 10 நிபந்தனைகள்... மறுப்பேச்சின்றி ஒப்புக்கொண்ட ட்ரம்ப்

40 நாட்கள் என்பது அசாதாரணமான நடவடிக்கை என்றே ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ரே பவல் குறிப்பிடுகிறார். மார்ச் 27 தொடங்கி மே 6 ஆம் திகதி வரையில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்.

இம்மண்டலங்கள் தென் கொரியாவிற்கு அப்பால் உள்ள மஞ்சள் கடலிலிருந்து, ஜப்பானிற்கு அப்பால் உள்ள கிழக்குச் சீனக் கடல் வரை பரவியுள்ளது. அதாவது தைவான் நிலப்பரப்பை விட பெரியதொரு பகுதியாகும்.

அடுத்த 40 நாட்கள்... நாட்டின் பெரும்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதித்த சீனா | China Restricts Airspace 40 Days

உலக வல்லரசு

Notams என அறியப்படும் இந்தக் கட்டுப்பாடானது விமானப் பாதையிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்திலோ ஏற்படும் தற்காலிக அபாயங்கள் குறித்து விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதாகும்.

இது விண்வெளிப் பாதைகள் உட்பட அனைத்து வான்வழிச் செயல்பாடுகளுக்கும் பொருந்தும். இதனிடையே, தைவான் விவகாரத்தில் சீனாவும் அமெரிக்காவும் போரிட்டால், எந்த உலக வல்லரசு வெற்றி பெறும் என்பதை, அமெரிக்காவின் அதிமுக்கிய ரகசியப் பாதுகாப்பு ஆவணம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ள நிலையிலேயே இந்த 40 நாட்கள் கட்டுப்பாடும் வெளியாகியுள்ளது.

அடுத்த 40 நாட்கள்... நாட்டின் பெரும்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதித்த சீனா | China Restricts Airspace 40 Days

மேலும், சீனாவின் மலிவானதும், மிகவும் மேம்பட்டதுமான ஆயுதங்களின் பெருமளவிலான உற்பத்தி, அமெரிக்காவின் போர் விமானங்கள், கப்பல்கள் மற்றும் செயற்கைக்கோள்களைப் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் ஆழ்த்துவதாகவும் கசிந்துள்ள அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US