இரு நாடுகள் உறவில் பாதிப்பு ஏற்படும்: சுவிட்சர்லாந்துக்கு சீனா எச்சரிக்கை
சீனாவுக்கெதிராக தடைகள் விதித்தால் இரு நாடுகள் உறவில் பாதிப்பு ஏற்படும் என சுவிட்சர்லாந்தை சீனா எச்சரித்துள்ளது.
தடைகளின் பின்னணியில் உள்ளது சீனாவின் மனித உரிமைகள் மீறல்.
சீனாவுக்கெதிராக தடைகள் விதித்தால் இரு நாடுகள் உறவில் பாதிப்பு ஏற்படும் என சுவிட்சர்லாந்தை சீனா எச்சரித்துள்ளது.
சீனாவுக்கெதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடைகளைப் பின்பற்றி சுவிட்சர்லாந்தும் சீனா மீது தடைகள் விதிக்குமானால், இரு நாடுகள் உறவில் பாதிப்பு ஏற்படும் என சுவிட்சர்லாந்துக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.
Bernஇல் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த என சுவிட்சர்லாந்துக்கான சீன தூதரான Wang Shihting இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Keystone / Alex Plavevski
உய்குர் மக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் தொடர்பில் சீனா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் சீனா மீது தடைகள் விதித்தது.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடைகளைப் பின்பற்றி சீனா மீது தடைகள் விதிப்பதைக் குறித்து சுவிட்சர்லாந்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் சீனா மீது தடைகள் விதிக்க வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், சீனாவுக்கெதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடைகளைப் பின்பற்றி சுவிட்சர்லாந்தும் சீனா மீது தடைகள் விதிக்குமானால், சீன சுவிட்சர்லாந்து உறவில் பாதிப்பு ஏற்படும் என சுவிட்சர்லாந்துக்கான சீன தூதரான Wang Shihting எச்சரித்துள்ளார்.