நீரில் மூழ்கிய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்: அமெரிக்க அதிகாரியின் தகவலால் பரபரப்பு
அமெரிக்க உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், சீனாவின் அணுசக்தி தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பல் இந்த ஆண்டு தொடக்கத்தில் நீரில் மூழ்கியதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
சீனா தனது இராணுவ பலத்தை விரிவுபடுத்த மேற்கொண்ட முயற்சிகளின் போது ஏற்பட்ட பின்னடைவாக இது பார்க்கப்படுகிறது.
சீனா ஏற்கனவே உலகின் மிகப்பெரிய கடற்படையை கொண்ட நாடாக பார்க்கப்படுகிறது, அதன்படி சீனாவிடம் தோராயமாக 370 க்கும் மேற்பட்ட கடற்படை கப்பல்கள் உள்ளன. இந்த வரிசையில், சீனா புதிய தலைமுறைக்கான அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தது.
Reuters
இந்நிலையில் சீனாவின் புதிய முதல் தர அணுசக்தி தாக்குதல் திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பல் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கால்வாயின் அருகே நீரில் மூழ்கியதாக பெயர் வெளியிடாத அமெரிக்காவின் உயர் பாதுகாப்பு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
சீனா மறுப்பு
இதையடுத்து குறிப்பிட்ட தகவல் குறித்து எந்தவொரு தகவலும் தங்களிடம் இல்லை என்று வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் நீர்மூழ்கி கப்பல் நீரில் மூழ்குவதற்கான காரணம் மற்றும் அப்போது அதில் அணு எரிபொருள் இருந்ததாக என்பது குறித்தும் தங்களுக்கு தெளிவாக தெரியாது என்று சீன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |