போக்குவரத்து காவல் ரோபோக்கள் முதல் இயந்திர ரோந்து நாய் வரை: அசத்தும் சீன கண்காட்சி
China's Public security technology expo : சீனாவில் பொது பாதுகாப்புத் துறையில் ரோபோக்கள் பயன்படுத்துவது தொடர்பான கண்காட்சி தொடங்கியுள்ளது.
பொது பாதுகாப்புத் துறையில் ரோபோக்கள்
கீழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள லியானியுங்காங்(Lianyungang) நகரில் சிறப்பு கண்காட்சி ஒன்று தொடங்கியுள்ளது.
சீனாவின் பொது பாதுகாப்புத் துறையில் அதாவது காவல், ரோந்து மற்றும் வெடிகுண்டு அகற்றுதல் துறையில் ரோபோக்களை பயன்படுத்துவது தொடர்பான கண்காட்சி தொடங்கியுள்ளது.

இந்த கண்காட்சியில் ரோந்து நாய் ரோபோக்கள், போக்குவரத்து காவலர் ரோபோக்கள் மற்றும் வெடிக்குண்டுகளை அகற்றும் சிறப்பு தடுப்பு ரோபோக்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
காவல்துறை மற்றும் பொதுப் பாதுகாப்புத் துறையின் இந்த கண்காட்சியில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ரோபோ தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மனித ரோபோக்கள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |